Images
  • children
    (படம்: Unsplash)

பிள்ளைகளை அடிப்பதில் பயனில்லை: மருத்துவர்கள்

பிள்ளைகளை அடிப்பது பயனில்லாதது என்றும் அதனால் அவர்களுக்குக் கெடுதல் விளையலாம் என்றும் பிள்ளைகளுக்கான மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

பிள்ளைகளை அடிப்பதால் அவர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்பதை மருத்துவர்கள் ஒப்புக்கொண்டனர்.

பிள்ளைகளை அடிப்பதன் மூலம் அவர்களுக்கு எது சரி, எது தவறு என்பதைப் பெற்றோர் உணர்த்த முயல்கின்றனர். ஆனால் அதன் மூலம் பெரிதாகப் பலன் விளையாது என்று என்பதை மருத்துவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், கண்டிப்பு என்ற வகையில் சிறுவர்களை அடிப்பதால் அவர்கள் அதை எதிர்க்கக்கூடும். அதாவது எதைச் செய்யக்கூடாது என்று சொல்லி பெற்றோர் கண்டிக்கிறார்களோ அதையே பிள்ளைகள் செய்ய முற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

பிள்ளைகளை அடிப்பதால், அவர்களின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்றும் மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.  

Top