Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உறைப்பான உணவா? நாக்கிற்கான நிவாரணம்!

கார உணவால் ஏற்படும் எரிச்சலை போக்க சாக்லேட் உதவும். அதிலும் பால் கலக்கப்பட்ட சாக்லேட்டுகள் சிறந்தது.

வாசிப்புநேரம் -

இந்திய உணவுகளில் பெரும்பாலும் காரம் அதிகம் உண்டு.

உறைப்பான உணவுவகைகளை விரும்பும் பலரும் உள்ளனர்.

எனினும் சில வேளைகளில் நாக்கு காரத்தை விரும்புவதில்லை.

ஒருவகையான எரிச்சல் வாட்டும் வேளையில் கடகடவென தண்ணீர் குடிக்கத்தான் தோன்றும்.

ஆனால் அது நிவாரணத்தைக் கொடுக்கும் என உத்தரவாதம் இல்லை.

அதற்குப் பதில் என்ன செய்யலாம்?

ஒரு குவளை பால்

உறைப்பான உணவுவகைகளை உண்டபிறகு ஒரு குவளை பால் குடிப்பது நல்லது. பால் இல்லையென்றால் ஐஸ் கிரிம், தயிர், பாலாடைக் கட்டி போன்றவையும் காரத்தைக் குறைக்க உதவும்.

தக்காளி, ஆரஞ்சு அல்லது எலும்பிச்சை பழத் துண்டு

காரத்தைத் தணிக்கும் தன்மை இந்தப் பழவகைகளுக்கு உண்டு. பழச்சாறாகவும் அவற்றை அருந்தலாம்.

சர்க்கரை

கார உணவினால் ஏற்படும் சூட்டினைத் தணிக்கும் தன்மை சர்க்கரைக்கு உண்டு. சர்க்கரைக்குப் பதில் தேனும் சாப்பிடலாம்.

காரமான எண்ணெயைச் சர்க்கரை உறிஞ்சும் என நம்பப்படுகிறது.  

சாக்லேட் (Chocolate)

கார உணவால் ஏற்படும் எரிச்சலை போக்க சாக்லேட் உதவும்.
அதிலும் பால் கலக்கப்பட்ட சாக்லேட்டுகள் சிறந்தது.

ரொட்டித் துண்டுகள் 

பெரும்பாலான வீடுகளில் எப்போதும் ரொட்டிகள் இருக்கும்.

கப்சாய்சின் எனும் எண்ணெய் வகையைக் காரத்திலிருந்து பிரித்தெடுக்கும் தன்மை ரொட்டிக்கு உண்டு.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்