Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பாத்திரங்கள் கழுவும் பஞ்சை எப்போது மாற்ற வேண்டும்?

பாத்திரங்களைச் சுத்தமாக வைத்திருக்கும் பஞ்சைப் பற்றி நினைத்தது உண்டா? பஞ்சு சுத்தமாக இருந்தால் தான் பாத்திரங்கள் சுத்தமாக இருக்கும்.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பாத்திரங்களைச் சுத்தமாக வைத்திருக்கும் பஞ்சைப் பற்றி நினைத்தது உண்டா? பஞ்சு சுத்தமாக இருந்தால் தான் பாத்திரங்கள் சுத்தமாக இருக்கும்.

உணவுத் தயாரிப்பினால் அன்றாடம் புது வகைக் கிருமிகள் பஞ்சுகளில் சென்று சேர்கின்றன. அவை எப்போதும் ஈரமாக, சூடான இடங்களில் இருப்பதால் அந்தக் கிருமிகள் பல மடங்காகின்றன.

இதற்குத் தீர்வு பஞ்சுகளைச் சுத்தம் செய்வது அல்லது அவற்றை முற்றிலும் மாற்றுவது.

அடிக்கடி வீட்டில் சமைப்பவர்கள் இரு வாரங்களுக்கு ஒரு முறை பஞ்சுகளை மாற்றுமாறு ஆலோசனை கூறப்படுகிறது. அன்றாடம் சமைக்காதவர்கள் மாதத்திற்கு ஒரு முறை பஞ்சுகளை மாற்ற வேண்டும்.

சிக்கனமான முறையில் பஞ்சுகளின் ஆயுள் காலத்தை நீட்டிக்க விரும்புவோர் அவற்றைச் சுத்தம் செய்யலாம். அவற்றைத் தண்ணீரில் சுக்கா அல்லது பிளீச்சுடன் (bleach) கலந்து ஐந்து நிமிடம் ஊற வைக்கலாம். பின்னர் அதைக் கழுவிக் காய வைக்கவேண்டும்.

தினமும் பஞ்சுகளை அலசிக் காய வைப்பதும் கிருமிப் பரவலைத் தடுக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்