Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

'சொறிவதில் சுகம். ஏன்?' கண்டுபிடித்தவருக்கு Ig நொபெல் விருது

வித்தியாசமான விஞ்ஞானச் சாதனைகளை அங்கீகரிக்கின்றன Ig நொபெல் விருதுகள்.

வாசிப்புநேரம் -
'சொறிவதில் சுகம். ஏன்?' கண்டுபிடித்தவருக்கு Ig நொபெல் விருது

(படம்: Reuters)

வித்தியாசமான விஞ்ஞானச் சாதனைகளை அங்கீகரிக்கின்றன Ig நொபெல் விருதுகள்.

'முதலில் சிரிக்கவைக்கும், பின்னர் சிந்திக்க வைக்கும்' கண்டுபிடிப்புகளும் ஆய்வுகளும் இதன்கீழ் அங்கீகரிக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு விருதைப் பெற்ற சில கண்டுபிடிப்புகள்:

  • சொறிவதில் சுகம் இருக்கிறதே...ஏன்?
  • எங்கு சொறிவதில் அதிக சுகம்?
  • 5 வயதுப் பிள்ளைக்குச் சராசரியாக நாளொன்றுக்கு எவ்வளவு எச்சில் வழிகிறது?
  • இத்தாலியில் தயாரித்து, உட்கொள்ளப்படும் பிஸ்ஸா புற்றுநோயிலிருந்து காக்கிறதா?
  • அணையாடை (Diaper) மாற்றும் இயந்திரம்

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இப்படிப்பட்ட 10 விருதுகள் வழங்கப்பட்டன.

இவர்களுக்குப் பரிசு என்னவென்று தெரியுமா?

10 டிரில்லியன் டாலர்!!

ஆம்! 10 டிரில்லியன் ஸிம்பாப்வே டாலர்.

(1 சிங்கப்பூர் வெள்ளி 440 ஸிம்பாப்வே டாலர் - நீங்களே கணக்கு செய்து கொள்ளுங்கள்)

வெற்றியாளர்கள் 60 விநாடிகளுக்கு ஓர் உரை நிகழ்த்தவேண்டும். ஒரு விநாடி கூடிவிட்டாலும், 8 வயதுச் சிறுமி மேடைக்கு வந்து "தயவுசெய்து நிறுத்துங்கள்! என்னால் தாங்க முடியவில்லை" என்கிறார்.

"வித்தியாசமாக இருக்கவேண்டும்; கற்பனைத் திறன் கொண்டவர்களை அங்கீகரிக்கவேண்டும்; விஞ்ஞானம், மருத்துவம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் மக்களுக்கு ஆர்வமூட்டவேண்டும்" இதுவே விருதுகளின் நோக்கம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்