Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

Squid Game தொடரில் காட்டப்படும் தொலைபேசி எண்ணால் வந்த வினை-திருத்தவிருக்கும் Netflix

Netflix காணொளிச் சேவையைப் பயன்படுத்துவோர் இடையே இப்போது பிரபலமான தொடராக உள்ளது Squid Game.

வாசிப்புநேரம் -

Netflix காணொளிச் சேவையைப் பயன்படுத்துவோர் இடையே இப்போது பிரபலமான தொடராக உள்ளது Squid Game.

தொடரில் தொலைபேசி எண் ஒன்று, ஒரு காட்சியில் காட்டப்படுகிறது.

ஆனால் அது ஒரு பெண்மணியின் உண்மையான தொலைபேசி எண்.

தொடர் உலகளவில் புகழ்பெற்றதை அடுத்து, தொலைபேசி எண் பலருக்கு எட்டியது.

அந்த எண்ணுக்குப் பல தொல்லை அழைப்புகள் வருவதாக அந்தப் பெண்மணி நிறுவனத்தின் மீது புகார் செய்தார்.

அதனால், அதை எப்படியாவது அகற்ற அல்லது மாற்ற Netflix ஒப்புக்கொண்டுள்ளது.

தென் கொரியத் தயாரிப்பான அந்தப் படைப்பில், கடன் சிக்கலில் உள்ளவர்கள், அந்த எண்ணை அழைத்தால், போட்டிகளில் பங்குபெற்று வாழ்வா சாவா விளையாட்டுகளை விளையாடி பணத்தை வெல்லலாம் என்று காட்டப்படுகிறது.

அது உண்மை எனத் தவறாகப் புரிந்துகொண்டு, பலர் அந்தப் பெண்மணியின் எண்ணை அழைக்கிறார்கள்.

அதனால், அவரது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

நிறுவனம் அவருக்கு ஐந்து மில்லியன் கொரிய வான் வரை இழப்பீடு வழங்கத் தயாராக இருந்ததாகவும், அதை அவர் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த எண்ணிற்கு அழைப்பதைத் தவிர்க்குமாறு ரசிகர்களை நிறுவனம் கேட்டுக்கொண்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்