Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நிற்கும்போது வலிக்கிறதா?

உணவு வாங்குவதற்கு வரிசையில் நிற்கவேண்டும், மக்கள் நெரிசல் கொண்ட பேருந்து, ரயில் ஆகியவற்றில் நிற்கவேண்டும். சில வேலைகளில் முற்றிலும் நிற்கவேண்டிய நிலைமையும் உண்டு.

வாசிப்புநேரம் -
நிற்கும்போது வலிக்கிறதா?

(படம்: Pixabay)


உணவு வாங்குவதற்கு வரிசையில் நிற்கவேண்டும், மக்கள் நெரிசல் கொண்ட பேருந்து, ரயில் ஆகியவற்றில் நிற்கவேண்டும். சில வேலைகளில் முற்றிலும் நிற்கவேண்டிய நிலைமையும் உண்டு.

இதனால் நம்மில் பலர் கால் வலியால் அவதிப்படுகிறோம். அதோடு உடலில் மற்ற பகுதிகளும் வலிக்கலாம்.

வலியை எப்படி தவிர்ப்பது; எப்படி குறைப்பது ? The New York Times நாளேடு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

1. அவ்வப்போது நடக்கவேண்டும்

நிற்கவேண்டிய நிலைமை வந்தால், 30 நிமிடங்களுக்கு ஒரு முறை நிற்பதை விட்டுவிட்டு, சிறிது நேரத்திற்கு நடக்கவேண்டும். இதனால், கால் வலி, முதுகு வலி குறையலாம். முடியாவிட்டால், கை கால்களை அசைக்க வேண்டும்.

2. நல்ல காலணிகளை அணியவேண்டும்

நீண்ட நேரத்திற்கு நிற்கும் நிலைமை ஏற்பட்டால், அதற்குத் தகுந்த காலணிகளை அணியவேண்டும்.
Flats, வார்கள் கொண்ட காலணிகளை அணியலாம்.

3. கைபேசி பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும்

கைபேசியைப் பயன்படுத்தும்போது, நாம் கீழே பார்க்கிறோம். அதில் கழுத்து வலி ஏற்படும்.
அதனால் முடிந்தவரை நிற்கும்போது, கைபேசியைத் தவிர்க்கவேண்டும். இல்லையென்றால், தலையை நேராக வைத்து, கைப்பேசியை நேராகப் பார்ப்பது சிறந்தது.

வலியைக் குறைக்கும் இந்த வழிகள் உங்களுக்கு உதவுமா?



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்