Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உடலுக்கு நல்லது எது? - உடற்பயிற்சியா? நிற்பதா?

உடலைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்வது மட்டுமே போதாது.

வாசிப்புநேரம் -

உடலைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்வது மட்டுமே போதாது.

இருக்கையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதற்குப் பதிலாக நேரத்தை குறைத்துக்கொள்ளுமாறு புதிய ஆய்வு கூறுகிறது.

வாரத்திற்கு 150 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது ஆய்வு.

ஆனால், அலுவலகத்தில் நீண்டநேரத்திற்கு இருக்கையில் அமர்ந்து பணிபுரியும் ஊழியர்களுக்குப் பல வகையான நோய்கள் தொற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளது.

அவற்றைத் தவிர்க்க சிறிதுநேரம் நிற்பதே வழி என்கின்றனர் ஆய்வாளர்கள்.

வளர்சிதை மாற்றத்தில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த முயற்சி, ரத்தக் கொழுப்பை அகற்றி ரத்தத்தில் இன்சுலின் சுரக்கும் அளவையும் மேம்படுத்த உதவும்.

எனினும், குறுகிய காலத்திற்கு சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, முழுமையான முடிவுகளை அளிக்கவில்லை.

இருப்பினும், 'உடற்பயிற்சியா? நிற்பதா?' என்ற கேள்விக்கு இரு வழிகளும் பயனுள்ளதாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்