Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

புதிய 'Star Wars' திரைப்படம் வலிப்பு நோய் உள்ளவர்களைப் பாதிக்கக்கூடும்

'Star Wars: The Rise of Skywalker' திரைப்படம் வலிப்பு நோய் உள்ளவர்களிடையே பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று Disney எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வாசிப்புநேரம் -

'Star Wars: The Rise of Skywalker' திரைப்படம் வலிப்பு நோய் உள்ளவர்களிடையே பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று Disney எச்சரிக்கை விடுத்துள்ளது.

பலர் ஆவலுடன் எதிர்பார்க்கும் திரைப்படத்தில் அதிக வெளிச்சமான ஒளிக்காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

வெளிச்சத்தால் வலிப்பு ஏற்படும் நிலையில் உள்ளவர்களை அது பாதிக்கக்கூடும் என்று வலிப்பு நோய் அறநிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் தொடர்பாகத் திரையரங்குகளில் எச்சரிக்கை அறிவிப்புகள் வைக்கப்படவேண்டும் என்று Disney கூறியதாக CNN தெரிவித்துள்ளது.

அதீத வெளிச்சத்தால் பாதிக்கப்படுபவர்கள் ஏற்கனவே திரைப்படத்தைப் பார்த்த நண்பருடன் திரையரங்கிற்குச் செல்லலாம். வெளிச்சம் அதிகமுள்ள காட்சிகளுக்குமுன் நண்பர் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கலாம் என்றும் அறநிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்