Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவு - பத்தாண்டு நிறைவு

ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவு - பத்தாண்டு நிறைவு

வாசிப்புநேரம் -
ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவு - பத்தாண்டு நிறைவு

படங்கள்: REUTERS

பலரது கைகளில் ஆப்பிள் பழம் இருக்கிறதோ இல்லையோ... நிச்சயமாக Apple திறன்பேசி இருக்கும்.

உலகப் புகழ்பெற்ற Apple நிறுவனம், அதன் சாதனங்கள் ஆகியவற்றைத் தோற்றுவித்தவர் திரு. ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs)....

அவர் மறைந்து பத்தாண்டுகள் கடந்துவிட்டன. இருப்பினும், அவர் விட்டுச்சென்ற நிறுவனம் தொடர்ந்து வெற்றிநடை போடுகிறது.

அவரைப் பற்றி சில தகவல்கள்:

  • பிறப்பு: 24 பிப்ரவரி 1955
  • மறைவு: 5 அக்டோபர் 2011
  • பிறந்த இடம்: சான் பிரான்சிஸ்கோ, கலிஃபோர்னியா, அமெரிக்கா
  • மறைந்த இடம்: பாலோ அல்ட்டோ, கலிஃபோர்னியா
படங்கள்: REUTERS

Apple நிறுவனத்தைப் பற்றி:

- ஸ்டீவன் வொஸ்னியாக் (Steven Wozniak) என்ற அவரது உயர்நிலைப் பள்ளி நண்பருடன் தொடங்கப்பட்டது
- 1976ஆம் ஆண்டில் Apple Iக்கான மின்னிலக்கப் பலகை உருவாக்கப்பட்டது
- 1977 ஆம் ஆண்டில் Apple II கணினி உருவாக்கப்பட்டது
- பெருமளவில் வெற்றிபெற்ற அந்தக் கணினியைப் பலரும் வாங்கத் தொடங்கினர்.
- 1984இல் Macintoshஐ திரு. ஜாப்ஸ் உருவாக்கினார்
- ஆனால் அது சிறப்பாக அமையாததால், அவரை 1985ஆம் ஆண்டில் Apple நிறுவனம் வேலையிலிருந்து நீக்கியது

படங்கள்: REUTERS

Pixar நிறுவனம்:

- 1986ஆம் ஆண்டு, அவர் Pixarஇல் சேர்ந்துகொண்டார்.
- அது Lucas திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு பிரிவாக இருந்தது.
- உயிரோவியத் தயாரிப்புக் கூடமாக Pixar மாறியது
- உலகின் முதல் முழு வரைபடக் கேலிச்சித்திரமான Toy Story என்ற படத்தை உருவாக்கியது Pixar
- 1995ஆம் ஆண்டில் திரு. ஜாப்ஸ் அதன் காரணமாகப் பெரும் செல்வந்தரானார்.
- 2006ஆம் ஆண்டில் அவர் Pixarஐ, Disney நிறுவனத்திடம் விற்றார்.

படங்கள்: REUTERS

மீண்டும் Apple...

- 1997ஆம் ஆண்டில் பெரும் இழப்புகளைச் சந்தித்த Apple நிறுவனத்தை மீட்டெடுக்க திரு. ஜாப்ஸ் மீண்டும் நிறுவனத்தில் ஆலோசகராகச் சேர்க்கப்பட்டார்
- 1998ஆம் ஆண்டில் முட்டை வடிவிலான iMac கணினியை அவர் உருவாக்கினார்
- 2001ஆம் ஆண்டில் iTunes எனும் கணினி அமைப்பு செயல்படுத்தப்பட்டது; iPod எனும் இசை கேட்கும் MP4 சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது
- 2003ஆம் ஆண்டில், பதிவிறக்கம் செய்யக்கூடிய பிரபலமான MP3 பாடல்களை விற்று அவற்றிலிருந்து பணம் ஈட்டினார்
- 2006ஆம் ஆண்டுக்குள் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட பாடல்கள், காணொளிகள் iTunesஇல் விற்கப்பட்டன.
- 2007ஆம் ஆண்டில் நிறுவனத்தின் பெயர் Apple Inc. ஆக மாற்றப்பட்டது.
- அதே ஆண்டு iPhone திறன்பேசிகள் விற்பனைக்கு வந்தன.

படங்கள்: REUTERS

உடல்நலப் பிரச்சினைகள்

- 2003ஆம் ஆண்டில் அவருக்கு அரியவகைக் கணையப் புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது
- 2004ஆம் ஆண்டில் அவர் Whipple எனப்படும் பெரியவகையான அறுவைசிகிச்சையை மேற்கொண்டார்
- 2008ஆம் ஆண்டில் பெருமளவில் அவரது உடல் எடை குறைந்தது; அவருக்கு மீண்டும் புற்றுநோய் ஏற்பட்டதாகப் பலரும் நம்பினர்
- 2009ஆம் ஆண்டில் தம் உடலில் ஹாார்மோன் சுரப்பி அளவு சீராக இல்லை என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்
- ஒருவாரம் கழித்து, தமது உடல்நலத்தைப் பார்த்துக்கொள்ள அவர் வேலையிலிருந்து விடுப்பு எடுத்து, நிர்வாக அமைப்பிலிருந்து விலகிக்கொண்டார்
- 2009ஆம் ஆண்டில் அவர் மீண்டும் அறுவைசிகிச்சையை மேற்கொண்டார்
- அதே ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் வேலைக்குத் திரும்பினார்
- 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மருத்துவ விடுப்பில் சென்ற அவர், ஆகஸ்ட் மாதத்தில் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து விலகினார்
- அவர் தொடர்ந்து நிறுவனத்தின் தலைவராக இருந்தார்
- 2011ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 5ஆம் தேதியன்று அவர் இயற்கை எய்தினார்

திரு. ஜாப்ஸின் வாழ்க்கைப் பயணத்தில், பல இன்னல்கள் இருந்தன.

அவற்றைத் தடையாகக் காணாமல், தொடர்ந்து போராடி, புதுமைகளைப் படைக்க அவர் முனைந்தார்.

நம் கைகளில் இருக்கக்கூடிய iPhoneஐ மட்டும் பார்க்காமல், அதன் பின்னால் இருக்கும் அந்த மாமனிதரின் உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றையும் கண்டால், நமக்கும் புத்துணர்ச்சி சேரும்.

தகவல்: Britannica 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்