Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வயிற்று வலியா?... அது நோயின் அறிகுறியாக இருக்கலாம்

வயிற்று வலி, வயிற்று வீக்கம் போன்றவற்றால் அவதிப்படுவோர், 'வயிற்று வலிதானே..' என்று அவற்றைக் குறைத்து எடை போட்டுவிடக்கூடாது.

வாசிப்புநேரம் -
வயிற்று வலியா?... அது நோயின் அறிகுறியாக இருக்கலாம்

(படம்: Pixabay)


வயிற்று வலி, வயிற்று வீக்கம் போன்றவற்றால் அவதிப்படுவோர், 'வயிற்று வலிதானே..' என்று அவற்றைக் குறைத்து எடை போட்டுவிடக்கூடாது.

அவை பெருங்குடலில் ஏற்படும் சதை வளர்ச்சியின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

இக்காலத்தில் உண்ணப்படும் உணவில் நார்ச்சத்து குறைவாக உள்ளதால் Diverticulosis என்ற நோய் வரும் சாத்தியம் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அந்த நோய் இருந்தால், பெருங்குடலில் சிறு பைகள் போலச் சதைப்பகுதிகள் உருவாகலாம்.

உணவுக் கழிவுகள் அந்தப் பைகளில் சிக்கலாம். அதனால்
கிருமித்தொற்று ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Diverticulosis நோய் இருப்பதை நோயாளிகள் பெரும்பாலும் உணர முடியாது.

பெருங்குடல் பரிசோதனையால் மட்டுந்தான் அதனைக் கண்டுபிடிக்கமுடியும்.

வயிற்று வலி, வயிறு வீக்கம், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் ஆகியவை நோயின் அறிகுறிகள்.

பழங்களையும் தானிய வகைகளையும் அதிகம் சாப்பிடுவதன்வழி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்று ஆலோசனை கூறப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்