Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மனவுளைச்சலைக் குறைக்க செய்யக்கூடாதவை

பல வேலைகளைக் கையாண்ட பிறகு மனவுளைச்சலைத் தணிப்பதற்காகப் பலரும் வெவ்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும்.

வாசிப்புநேரம் -

பல வேலைகளைக் கையாண்ட பிறகு மனவுளைச்சலைத் தணிப்பதற்காகப் பலரும் வெவ்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும்.

ஆனால் அத்தகைய சில நடவடிக்கைகளே மனவுளைச்சலை அதிகரிக்கலாம் என ஆய்வுகள் சில கூறுகின்றன.

தொலைக்காட்சி பார்ப்பது:
களைத்து வீடு திரும்புவோர் தொலைக்காட்சியைப் பல மணிநேரம் பார்க்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கலாம்.

செய்ய வேண்டிய முக்கிய வேலைகளை ஒத்திவைப்பதற்குப் பல வேளைகளில் அது காரணமாக அமையலாம்.

அதனால் மீண்டும் வேலைக்குத் திரும்பும்போது மனவுளைச்சல் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

நடந்ததை மீண்டும் நினைத்துப் பார்ப்பது:

வகுப்பறைத் தேர்வாக இருக்கட்டும், உயர் அதிகாரிகளுடனான சந்திப்பாக இருக்கட்டும், முடிந்ததைப் பற்றி மீண்டும் மீண்டும் நினைத்துப்பார்த்து வருத்தப்படுவதில் பயனில்லை.

குறிப்பாக மனவுளைச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும்போது நடந்ததைப் பற்றியே சிந்திப்பது ஆக்ககரமாக இருக்காது.

தெளிவான மனநிலையிலேயே சரியான முடிவுகளை எடுக்கமுடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கவனத்தைத் திருப்ப இசை கேட்கலாம்; உடற்பயிற்சி செய்யலாம்:

சுற்றியிருப்பவர்களோடு பிரச்சினைகளை உடனடியாகப் பகிர்ந்துகொள்ளும்போது மனம் பாதிக்கப்பட்ட நிலையில் வார்த்தைகள் உணர்வுமிக்கதாகவே வெளிவரும்.
அதனால் நிலைமை குறித்து உடனடியாகப் பகிர்ந்துகொள்வதால் தேவையில்லாத கருத்துக்களை முன்வைக்கக்கூடும்.

நிதானமான பிறகு மனவுளைச்சலைப் பற்றி உகந்த நபருடன் பகிர்ந்துகொள்ளலாம். மிகுந்த பாதிப்புக்குள்ளான நிலையில் மருத்துவ உதவியை நாடுவது நல்லது.

பொழுதைப் படுக்கையிலேயே கழிப்பது:
மனச்சோர்வு ஏற்படும்போது சிலர் நாள் முழுவதையும் படுக்கையிலே கழிப்பர்.

இது பல வேளைகளில் உடலையும் மனத்தையும் பெரும்பாலும் மேலும் சோர்வுக்குள்ளாக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

உலா செல்வது, புத்தகம் படிப்பது, அமைதியான இடத்தில் அமர்வது போன்ற நடவடிக்கைகள் உதவலாம்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்