Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மன அமைதிக்கு வழிவகுக்கும் யோகா

இன்று அனைத்துலக யோகா தினம். யோகா கலையைப் பின்பற்றுவோர், உலகெங்கிலும் இன்று அதனைக் கொண்டாடுகின்றனர்.

வாசிப்புநேரம் -
மன அமைதிக்கு வழிவகுக்கும் யோகா

படம்: AFP/Sajjad Hussain

இன்று அனைத்துலக யோகா தினம். யோகா கலையைப் பின்பற்றுவோர், உலகெங்கிலும் இன்று அதனைக் கொண்டாடுகின்றனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஏற்று, ஆண்டுதோறும், ஜூன் மாதம் 21-ஆம் தேதி யோகா தினமாகக் கொண்டாடப்படும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் அறிவித்தது.

2014-ஆம் ஆண்டு அதற்கான அங்கீகாரம் கிடைத்தது. நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் யோகா தினத்தை ஒட்டி உலகமெங்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் மைசூர் நகரில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் 80,000 பேர் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனவுளைச்சலில் இருந்து விடுபட யோகா உதவுகிறது. அதே நேரத்தில் மனத்திற்கு அமைதி அளித்து கவனம் செலுத்துவதற்கும் துணைபுரிகிறது

என்றார் திரு.மோடி. அண்மைக் காலங்களில் யோகா பிரபலம் அடைந்து வருகிறது. மில்லியன் கணக்கானோர் அன்றாடம் அதைச் செய்து வருகின்றனர். 



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்