Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கெட்டியாகப் பிடித்துகொள்ளும் ஆற்றல் எதைக் காட்டுகிறது?

ஒருவரின் வருங்கால உடல் ஆரோக்கியத்தை மதிப்பிட மருத்துவர்கள், பலவிதமான முறைகளைப் பின்பற்றுவதுண்டு.

வாசிப்புநேரம் -
கெட்டியாகப் பிடித்துகொள்ளும் ஆற்றல் எதைக் காட்டுகிறது?

படம்: AFP

ஒருவரின் வருங்கால உடல் ஆரோக்கியத்தை மதிப்பிட மருத்துவர்கள், பலவிதமான முறைகளைப் பின்பற்றுவதுண்டு.

ஒருவரின் உயரம், உடல் எடை, உடல் எடைக் குறியீடு, குடும்பப் பின்னணி, மரபணுக் காரணிகள், அவரது பழக்க வழக்கம் என அது பலவகைப்படும்.

ஆனால் பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், ஒருவர் ஒரு பொருளை எவ்வளவு கெட்டியாகப் பிடித்துக்கொள்ள முடிகிறது என்பதைப் பொறுத்து அவரது வருங்கால ஆரோக்கியத்தைக் கணிக்க முடியும் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

பொதுவாக முதியோரின் ஆரோக்கியத்தை அளவிட அந்த முறை ஒரு நல்ல அறிகுறியாகப் பலகாலமாகவே பயன்பட்டு வருகிறது.

ஆனால் இப்போது, அனைத்து வயதினரிடமும் ஏற்படக்கூடிய உடல்ரீதியான நோய்களை ஆராய மருத்துவர்களுக்கு அது கைகொடுக்குமெனத் தெரியவந்துள்ளது. 

இதய, நுரையீரல் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம், புற்றுநோய், உத்தேச ஆயுள் ஆகியவற்றை மேலும் புரிந்து கொள்ள அது உதவக்கூடும். 

ஒருவரின் கெட்டியாகப் பிடிக்கும் ஆற்றல், சுறுசுறுப்பான நடவடிக்கை, இரத்த அழுத்தம் ஆகியவற்றைக் காட்டிலும் இதய நோயுடன் அதிகத் தொடர்புடையதாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அது ஆச்சர்யத்துக்குரியதாக இருந்தாலும், மருத்துவத் துறைக்கு அதிகப் பயனுள்ள கண்டுபிடிப்பு என்கின்றனர் ஆய்வாளர்கள்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்