Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நீர்மூழ்கிக் கப்பல்கள் : நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

இந்தோனேசியாவில் காணாமல் போன நீர் மூழ்கிக் கப்பலில் இருந்த 53 பேரும் மாண்டதாக அந்நாட்டு ராணுவம் நேற்று தகவல் அளித்தது.

வாசிப்புநேரம் -

இந்தோனேசியாவில் காணாமல் போன நீர் மூழ்கிக் கப்பலில் இருந்த 53 பேரும் மாண்டதாக அந்நாட்டு ராணுவம் நேற்று தகவல் அளித்தது.

அதனையடுத்து நீர்மூழ்கிக் கப்பல்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள 'செய்தி' முற்பட்டது.

அவற்றைப் பற்றி திரட்டப்பட்ட முக்கியத் தகவல்களில் சில:

  • நீர்மூழ்கிக் கப்பல் என்றால் என்ன?

நீருக்கடியிலும், நீர்ப்பரப்பிலும் மிதக்கும் ஆற்றல் கொண்டது நீர்மூழ்கிக் கப்பல்.

  • அது கடல் பரப்பில் மிதப்பது எப்படி?

மிதக்க வேண்டியபோது, கப்பலில் உள்ள சிறப்புக் கலன்களில் காற்று நிரப்பப்படும். அப்போது, வெளியில் உள்ள நீரைவிட குறைவான எடையைக் கொண்டிருப்பதால் கப்பல் மிதக்கும்.

மூழ்கவேண்டியபோது, கலன்களில் நீரை நிரப்பவேண்டும்; அப்போது அது சுற்றியுள்ள கடல் நீரைவிட அதிக எடை கொண்டிருப்பதால் மூழ்கும்.

  • நீர்மூழ்கிக் கப்பல் எவ்வளவு ஆழம் வரை செல்லும்?

சராசரி நீர்மூழ்கிக் கப்பல்கள் கடலுக்கடியில் சுமார் 300 மீட்டர் வரை செல்லும்.

Trieste நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்கு அடியில், 10,911 மீட்டர் ஆழத்தில் மூழ்கியது. அதுவே உலகில் ஆக ஆழமாகச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல்.

  • நீருக்கடியில் கப்பல் எவ்வளவு வேகம் வரை செல்லும்?

அது நீர்மூழ்கிக் கப்பலின் ரகத்தைப் பொருத்தது.

1978இல் தயாரிக்கப்பட்ட ரஷ்யாவின் K-222 நீர்மூழ்கிக் கப்பலே உலகில் ஆகவேகமான நீர்மூழ்கிக் கப்பல். அது மணிக்கு அதிகபட்சம் 82.8 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

  • நீர்மூழ்கிக் கப்பல் எவ்வளவு பெரியது?

அதுவும் ரகத்தைப் பொருத்தது.

உலகின் ஆகப் பெரிய நீர்மூழ்கிக் கப்பல்கள்: ரஷ்யக் கடற்படையின் Typhoon ரகக் நீர்மூழ்கிக் கப்பல்கள். அவற்றின் நீளம் 175 மீட்டர்.

  • ஒரே நேரத்தில் எத்தனை பேர் நீர்மூழ்கிக் கப்பலில் இருக்கமுடியும்?

நீர்மூழ்கிக் கப்பலில் சராசரி 50இலிருந்து 100பேர் வரை இருக்கலாம்.

  • நீர்மூழ்கிக் கப்பல் சராசரியாக எத்தனை நாள்களுக்கு நீருக்கடியில் இருக்கலாம்?

பொதுவாக, நீருக்கடியில் 3 மாதங்கள் வரை இருக்கலாம். அணுசக்தியால் இயங்கும் கப்பல்கள், ஆண்டுக் கணக்கில் கூட நீருக்கடியில் தாக்குப்பிடிக்கும்.  


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்