Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சுவை பானங்களை அருந்துவதால் அதிகரிக்கும் புற்றுநோய் அபாயம்?

சுவை பானங்களை அருந்துவதால் சிலவகை புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
சுவை பானங்களை அருந்துவதால் அதிகரிக்கும் புற்றுநோய் அபாயம்?

(படம்: Pixabay)

சுவை பானங்களை அருந்துவதால் சிலவகை புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பிரான்ஸைச் சேர்ந்த ஆய்வாளர்கள், சுமார் ஒன்பது ஆண்டுகளாக 100,000க்கும் அதிகமானோரிடம் ஆய்வு நடத்தினர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். BMJ மருத்துவச் சஞ்சிகையில் ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது.

ஆய்வில் பங்கேற்றோர் அன்றாடம் அருந்தும் சுவை பானங்களின் அளவை ஆய்வாளர்கள் கணக்கெடுத்தனர்.

அன்றாடம் கூடுதலாக 100 மில்லி லிட்டர் சுவை பானத்தை அருந்தினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 18 விழுக்காடு உயரும் என்று ஆய்வில் தெரிய வந்தது.

மார்பகப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியம் 22 விழுக்காடு அதிகரிக்கும் எனவும் அதில் கண்டறியப்பட்டது.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 2,000க்கும் அதிகமானோருக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்