Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நாளைய நிலா...செந்நிலா

வடக்கு, தெற்கு அமெரிக்கக் கண்டங்களில் வசிப்போருக்கு நாளை இரவு அரிய வானியல் நிகழ்வைக் காண வாய்ப்புண்டு.

வாசிப்புநேரம் -
நாளைய நிலா...செந்நிலா

கோப்புப் படம்: REUTERS/Kai Pfaffenbach

வடக்கு, தெற்கு அமெரிக்கக் கண்டங்களில் வசிப்போருக்கு நாளை இரவு அரிய வானியல் நிகழ்வைக் காண வாய்ப்புண்டு.

முழுச் சந்திர கிரகணம் ஏற்படுவதுடன் நிலா சிவப்பாகவும்  தோற்றமளிக்கும்.

இரவு சுமார் 9 மணிக்குத் தொடங்கும் கிரகணம்,  நள்ளிரவுக்குச் சில நிமிடங்களுக்கு முன்னர் முழுமையடையும்.

நிலா, பூமி, சூரியன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்போது, முழுச் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அப்போது செந்நிறத்திலும் அது காட்சியளிக்கும்.

நாளைய முழுக் கிரகணம் சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கும்.

மொத்தம் மூன்றரை மணி நேரம் இடம்பெறும் அரிய வானியல் நிகழ்வைக் கண்டு ரசிக்க அமெரிக்காவின் பல இடங்களில்  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜனவரி மாதப் பௌர்ணமியை  “wolf moon”  எனக் குறிப்பிடுவது வழக்கம்.

பௌர்ணமியன்று நிலா பூமிக்கு வெகு அருகில் வரும்போது பெருமுழு நிலவு அதாவது "Super moon" எனப்படும்.

அவற்றையொட்டி, நாளைய பௌர்ணமி  Super Blood Wolf Moon என்றழைக்கப்படுகிறது.

பூமிப் பந்தின் மேற்குப் புறத்தில் வசிக்கும் சுமார் 2.8 மில்லியன் பேர் நாளை சிவப்புப் பெருமுழு நிலவைக் கண்டு ரசிப்பர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்