Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கொரோனா கிருமியை எதிர்க்க ஊட்டச்சத்துத் துணைப்பொருள்கள் உதவுமா?

COVID-19 கிருமித்தொற்று குறித்த அச்சத்தால் மக்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க ஊட்டச்சத்துத் துணைப்பொருள்களை நாடிவருகின்றனர்.

வாசிப்புநேரம் -
கொரோனா கிருமியை எதிர்க்க ஊட்டச்சத்துத் துணைப்பொருள்கள் உதவுமா?

(படம்: Pixabay)

COVID-19 கிருமித்தொற்று குறித்த அச்சத்தால் மக்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க ஊட்டச்சத்துத் துணைப்பொருள்களை நாடிவருகின்றனர்.

அமெரிக்காவில் அவற்றின் விற்பனை இதுவரை பார்க்காத அளவிற்கு அதிகரித்துள்ளதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக வைட்டமின், மூலிகைப் பொருள், சளிக்காய்ச்சலுக்கு எதிரான ஊட்டச்சத்துத் துணைப்பொருள்கள் ஆகியவற்றின் விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது.

Zinc, வைட்டமின் D, elderberry எனும் பழச்சாறு ஆகியவற்றுக்குச் சாதாரண சளிக்காய்ச்சலைத் தடுக்கும் ஆற்றலும் காய்ச்சலிலிருந்து விரைவாகக் குணமடையச் செய்யும் ஆற்றலும் உண்டு.

இருப்பினும் அவற்றை உட்கொள்வதால் கொரோனா கிருமி தொற்றும் சாத்தியத்தைக் குறைக்கலாம் என்பதற்கும் கிருமித்தொற்றிலிருந்து விரைவில்
குணமடையலாம் என்பதற்கும் ஆதாரம் இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சளிக்காய்ச்சல் கிருமியும் கொரோனா கிருமியும் இருவேறு வகைகள்;

கொரோனா கிருமி் சுவாசக் குழாய்களைப் பாதிக்கும்.

அது தொற்றுவதற்கான அறிகுறிகள் தென்படுவதற்கு அதிக நாள் ஆகும்.

அத்துடன் துணைப்பொருள்களை அதிக அளவில் உட்கொண்டால் உடல்நலத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுடன் மூலிகை, வைட்டமின் துணைப்பொருள்களைச் சேர்ந்துச் சாப்பிடும்போது பக்கவிளைவுகள் நேரலாம்.

பொதுவாக உணவுமுறையில் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏதும் இருந்தால் துணைப்பொருளை உட்கொள்ளலாம்.

ஆனால் ஆரோக்கியமான நபர்கள் அவற்றை நாடவேண்டிய அவசியமில்லை.

மக்கள் தங்கள் உணவுமுறை, தூக்கம், மனவுளைச்சல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதே சிறப்பு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்