Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தீபாவளிக்கு வெளிவரும் நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று

தீபாவளிக்கு வெளிவரும் நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று

வாசிப்புநேரம் -
தீபாவளிக்கு வெளிவரும் நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று

படம்: Instagram/2D enetertainment

திரைப்பட ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம், நவம்பர் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ஏர் டெக்கான் விமான நிறுவனத்தைத் தோற்றுவித்த திரு. GR கோபிநாத்தின் வாழ்க்கைக் கதை சூரரைப் போற்று.

திரைப்படத்தை சுதா கொங்கார இயக்கியுள்ளார்.

இன்று பிற்பகல், சூரரைப் போற்று படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியானது.

அதற்கு இணையவாசிகளிடம் அதிக வரவேற்பு இருந்தது.

"ஏர் ஓட்றவனும் ஏரோப்ளேன்ல போவான்" என்ற வசனம் பலரை ஈர்த்தது.

சூர்யாவுடன், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, கருணாஸ் போன்றோரும் படத்தில் முக்கியப் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

GV பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இம்மாதம் 30ஆம் தேதி, அந்தத் திரைப்படம் வெளியாக வேண்டியது.

ஆனால், படத்தை வெளியிடத் தேவையான சில சான்றிதழ்களைப் பெறத் தாமதமானது.

எனவே, பட வெளியீடு தீபாவளிக்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

COVID-19 நோய்த்தொற்று காரணமாகப் படம் இணையத்தில் வெளியிடப்படுகிறது.

Amazon Prime Video மூலம்தான் சூரரைப் போற்று படத்தைக் கண்டு ரசிக்கமுடியும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்