Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மாத்திரை சாப்பிடும்போது என்ன செய்யக்கூடாது?

பொதுவாக நமக்கு உடல்நலம் பாதிப்படையும்போது மாத்திரைகள் எடுப்போம்.  ஆனால் அந்த மாத்திரைகளைச் சரியான முறையில் விழுங்குகிறோமா?

வாசிப்புநேரம் -
மாத்திரை சாப்பிடும்போது என்ன செய்யக்கூடாது?

படம்: Pixabay

பொதுவாக நமக்கு உடல்நலம் பாதிப்படையும்போது மாத்திரைகள் எடுப்போம்.  ஆனால் அந்த மாத்திரைகளைச் சரியான முறையில் விழுங்குகிறோமா?

சிலர் மாத்திரைகளைத் தண்ணீர் இல்லாமல் விழுங்குவார்கள், அல்லது குறைவான தண்ணீர் கொண்டு விழுங்குவார்கள்.

அதனால் பல பின்விளைவுகள் ஏற்படக்கூடும என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உடல் நல பாதிப்பு:

மாத்திரையைத் தண்ணீர் இல்லாமல் விழுங்கினால் அது ஒட்டுமொத்த உடல் நலத்தையும் பாதிக்கும். சிலசமயம் அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தொண்டைக் குழாய் சேதம்:

தண்ணீர் இல்லாமல் மாத்திரையை விழுங்கும்போது அது தொண்டைக்குழாயில் சிராய்ப்புகளை ஏற்படுத்தலாம்.

அதனால் புண் அல்லது வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

மார்பு வலி:

மாத்திரையைத் தண்ணீர் இல்லாமல் விழுங்கும்போது அது தொண்டையில் சிக்க நேரிடலாம். இதனால் மார்பில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

இரத்தக் கசிவு:

மாத்திரையை தண்ணீர் இல்லாமல் விழுங்கும் போது, தொண்டையிலும் வயிற்றிலும் உள்ள நரம்புகள் காயமடையலாம். அது உடனே வலியை ஏற்படுத்தாமல் இரத்தக் கசிவுவை உண்டாக்கும். பின் உடல் வறட்சியை உண்டாக்கி சோர்வடையச் செய்யும்.

குடல் புண்:

தண்ணீர் இல்லாமல் மாத்திரைகளை அடிக்கடி விழுங்குபவராக இருந்தால், அவர்களுக்கு குடலில் புண்கள் வர அதிக வாய்ப்புள்ளது.

இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

எப்போது மாத்திரை உட்கொண்டாலும் குறைந்தது 2 குவளைத் தண்ணீர் குடிப்பது நல்லது.

பொதுவாக மருந்துகள் சாப்பிடும்போதும் அதிகத் தண்ணீர்க் குடிப்பது உடலுக்கு நன்மையளிக்கும்.

 

 

 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்