Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தேநீர் அருந்துவதற்கு ஓர் அளவு உண்டு

பழங்காலத்தில் இருந்தே தேநீர் குடிக்கும் பழக்கத்தை ஒரு வழக்கமாக மக்கள் கொண்டுள்ளனர். 

வாசிப்புநேரம் -

பழங்காலத்தில் இருந்தே தேநீர் குடிக்கும் பழக்கத்தை ஒரு வழக்கமாக மக்கள் கொண்டுள்ளனர்.

தேநீரில் பல நன்மைகள் இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.

நாள் ஒன்றுக்கு மூன்று கோப்பை தேநீரைத் தொடர்ந்து குடித்து வந்தால் இதயப் பிரச்சினைகள் 11 விழுக்காடு குறைய வாய்ப்பிருப்பதாகவும் ஓர் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் தேநீர் பருகுவதற்கும் ஒரு கணக்கு உண்டு, அளவை மீறினால் அதுவும் நஞ்சு தான்.

என்ன பிரச்சினைகள் உள்ளன ?

காஃபின்: ஒரு கோப்பை தேநீரில் 40 மில்லிகிராம் வரை காஃபின் இருக்கலாம். அதன் காரணமாக, தேநீர் அதிகமாகக் குடிக்கும்போது காஃபினுக்கு நாம் அடிமையாகலாம்.

கவனச் சிதறல், பதற்றம், அமைதியின்மை, தூக்க முறையில் பாதிப்பு போன்ற பிரச்சினைகளையும் எதிர்நோக்க வாய்ப்புள்ளது.

இரும்புச் சத்து குறைபாடு: டான்னின்ஸ் (Tannins) என்னும் வேதிப்பொருள் தேநீரில் இருப்பதால், இரும்புச் சத்தை ஏற்றுக்கொள்ளும் உடலின் தன்மை பாதிக்கப்படலாம். இரும்புச் சத்துள்ள உணவுகளைக் குறைவாக உண்பவர்கள் அதிகமாகத் தேநீர் குடித்தால் அவர்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகலாம்.

மருத்துவப் பாதிப்பு: அதிகமாகத் தேநீர் குடிப்பதால் சில மருந்துகள் உடலில் செயலிலந்து போக வாய்ப்புள்ளது, இதனால் நீங்கள் அதிகத் தேநீர் குடிக்கும் பழக்கம் கொண்டவரானால் மருத்துவரிடம் சொல்வது நல்லது.

சராசரியாக நாள் ஒன்றுக்கு மூன்று முதல் ஐந்து கோப்பை தேநீர் குடிப்பது எந்தக் பிரச்சினையும் விளைவிக்காது என்று ஆய்வுகள் கூறுகின்றன.





 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்