Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தொழில்நுட்பக் கோளாற்றினால் மனவுளைச்சலா?

தொழில்நுட்பக் கோளாற்றினால் மனவுளைச்சலா?

வாசிப்புநேரம் -
தொழில்நுட்பக் கோளாற்றினால் மனவுளைச்சலா?

(கோப்புப் படம்: Reuters/Andrew Kelly)

கிருமிப் பரவல் சூழலில் பெரும்பாலோருக்குத் துணையாக இருப்பது தொழில்நுட்பம்.

சில வேளைகளில், அதுவும் முக்கியமாகத் தேவைப்படும் நேரத்தில், தொழில்நுட்பம் நம்மைக் கைவிடக்கூடும்.

அது மனவுளைச்சலை ஏற்படுத்தலாம்.

கணினிக் கோளாற்றினால் மனவுளைச்சல் பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதாய் ஆய்வுகள் கூறுகின்றன.

கடந்த ஓர் ஆண்டில் பள்ளிகளிலும் வேலை இடங்களிலும் பெரிய அளவில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கணினியால் ஏற்படும் மன ரீதியான பிரச்சினைகள் குறித்துக் கண்டறிய
Dell Technologies நிறுவனமும் நரம்பு அறிவியல் (neuroscience) நிறுவனமான EMOTIVஉம் ஆய்வு ஒன்றை நடத்தின.

அதில், கணினியால் ஏற்படும் மனவுளைச்சலில் இருந்து விடுபட்டு அமைதிநிலைக்குத் திரும்ப, பங்கேற்பாளர்கள் வழக்கத்தைவிட மும்மடங்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டது தெரியவந்தது.

அத்தகைய மனவுளைச்சலிலிருந்து விடுபட 5 வழிகளை வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

  • அந்த நாளைக்கு என்னென்ன செய்ய வேண்டும் எனத் திட்டமிடுங்கள்.
  • வேலைக்கு இடையில் அடிக்கடி குறுக்கிடாமல், மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் அனுப்ப குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள்.
  • ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அமர்ந்திருக்கும் இடத்தைவிட்டு நகருங்கள்.
  • தொழில்நுட்ப மென்பொருளை அண்மைய மாற்றங்களுக்கு ஏற்ப வைத்திருங்கள்.
  • சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான தேவை என்ன என்பதைச் சிந்தித்துச் செயல்படுங்கள்.

-Healthline 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்