Images
  • zombie
    (படம்: Youtube)

பழி ஏற்க மறுக்கும் பாவப்பட்ட பாட்டி

கனடாவில் நடந்த வேடிக்கை. 86 வயது கிறிஸ்டின் மெக்மில்லன் எனும் மூதாட்டி, Metro 2033 எனும் விளையாட்டை சட்டவிரோதமாகப் பதிவிறக்கம் செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதில் வரும் Zombie எனப்படும் கற்பனைக் கதாபாத்திரம் பற்றித் தமக்கு ஏதும் தெரியாது, அதைக் கொன்று குவித்து புள்ளிகள் சேர்க்க தாம் எந்த முயற்சியும் செய்யவில்லை என்று பரிதாபமாக்க் கூறியிருக்கிறார் அந்தப் பாவப்பட்ட மூதாட்டி. 

சட்டவிரோத பதிவிறக்கத்துக்கு அவர் ஆயிரம் டாலர் அபராதம் செலுத்தவேண்டும் என்று அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தள்ளாத வயதில், எனக்கேன் இந்தச் சோதனை என்று அங்கலாய்த்துக்கொண்டார் மூதாட்டி.
விளையாட்டு நிறுவனத்தைத் தொடர்புகொண்டபோது, எங்கோ தவறு நேர்ந்திருக்கிறது. அது ஓர் அசம்பாவிதம் என்று அது சொன்னது. அறிக்கையை மீட்டுக்கொள்ளப்போவதாக நிறுவனம் கூறியிருக்கிறது.
 

Top