Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் Apple கடிகாரம்

சான் பிரான்சிஸ்கோ: Apple நிறுவனம், தனது கடிகாரத்தை இரண்டு ஆண்டுகளுக்குச் சந்தையில் வெளியிட்டது.அந்தக் கடிகாரம் எல்லாத் தரப்பினரின் விருப்பத்திற்கும் ஈடுகொடுக்க முயன்றது.  ஆயினும் இம்முறை உடற்பயிற்சி, உடல் ஆரோக்கிய ஆர்வலர்களைக் குறிப்பாக ஈர்க்க முயல்கிறது.  

வாசிப்புநேரம் -

சான் பிரான்சிஸ்கோ: Apple நிறுவனம், தனது கடிகாரத்தை இரண்டு ஆண்டுகளுக்குச் சந்தையில் வெளியிட்டது.

அந்தக் கடிகாரம் எல்லாத் தரப்பினரின் விருப்பத்திற்கும் ஈடுகொடுக்க முயன்றது.

ஆயினும் இம்முறை உடற்பயிற்சி, உடல் ஆரோக்கிய ஆர்வலர்களைக் குறிப்பாக ஈர்க்க முயல்கிறது.  புதிய கடிகாரம் தண்ணீர் புகாத தன்மையைக் கொண்டுள்ளது. அத்துடன் அதில் GPS சில்லும்(chip) உள்ளது. 

உடற்பயிற்சி நடவடிக்கைகளைப் பதிவுசெய்ய அந்தத் தொழில்நுட்பம் உதவுவதால் உடற்பயிற்சி ஆர்வலர்கள் அதை வரவேற்கின்றனர். பயனீட்டாளர்களின் தேவைகளை அறிந்து அதற்குத் தகுந்தாற்போல் Apple நிறுவனம் நடவடிக்கைகளை எடுப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

உடல் ஆரோக்கியத்தை மட்டும் கருத்திற்கொள்ளாமல் அனைவரையும் ஈர்க்கும் வகையில் கடிகாரத்தின் அம்சங்களை விரிவுபடுத்தவேண்டும் என்று அவர்கள் கருத்துரைக்கின்றனர்.

புதிய கடிகாரத்தின் விலை US$369 டாலரிலிருந்து தொடங்குகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்