Images
  • 12Oct Samsung Galaxy note (1)
    (படம்: REUTERS/Beawiharta)

"என்ன நடக்கிறது?" சாம்சுங்கிடம் முதலீட்டாளர்கள் கேள்வி

சோல்: சாம்சுங் நிறுவத்தின் பங்கு விலைகள் ஒரு மாதம் காணாத சரிவைச் சந்தித்துள்ளன.

சாம்சுங் கைபேசிகள் தீப்பற்றுவதற்கான காரணத்தை நிறுவனம் விரைவாகக் கண்டறியவேண்டும் என்று முதலீட்டார்கள் கோருகின்றனர்.

US$882 மதிப்புள்ள கைத்தொலைப்பேசியின் விற்பனையை ரத்து செய்துள்ளது சாம்சுங். இதுவரை சாம்சுங் வெளியிட்ட நவீனப் படைப்புகளில் ஆகப் பெரிய தோல்வியாக நோட் 7 இருக்கக்கூடும்.

2.5 மில்லியன் நோட் 7 கைத்தொலைபேசிகளை மீட்டுக்கொள்வதாக, அது சென்ற மாத முற்பகுதியில் அறிவித்தது.

மாற்றங்கள் செய்த பிறகு, பிரச்சினை கட்டுக்குள் வந்ததாக அப்போது கருதப்பட்டது.

ஆனால், அடுத்து வெளியிடப்பட்ட கைத்தொலைப்பேசிகளும் எரியத் தொடங்கின.

சாம்சுங்கின் நிறுவன அடையாளத்திற்கும் வருங்கால வருவாய்க்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பு மேலும் மோசமடையக்கூடும் என்று முதலீட்டாளர்களும் ஆய்வாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.

அந்த இழப்பு US$17 பில்லியனை எட்டக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.



Top