Images
  • 16 feb facebook job (1)

'வேலைவெட்டி' இல்லாதவர்களுக்காக ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்கில் இனி நண்பர்களை மட்டுமல்ல, வேலையும் தேடலாம்.

அதற்கான புதிய அம்சம் ஒன்றை அமெரிக்காவிலும், கனடாவிலும் ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த அம்சத்தின் மூலம் முதலாளிகள் தங்களது நிறுவனத்தில் உள்ள வேலை வாய்ப்புகளை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யலாம்.

வேலை தேடுபவர்கள் தங்களுக்கு விருப்பமான வேலைகளுக்கு விண்ணப்பிக்க, 'விண்ணப்பிக்கவும்' என்பதை 'க்ளிக்' செய்யவேண்டும்.

அதனைத் தொடர்ந்து ஏற்கனவே ஃபேஸ்புக்கில் உள்ள தங்களது தகவல்களைக் கொண்டு பூர்த்திசெய்யப்பட்ட ஒரு படிவம் உருவாகும்.

அதில் அவர்கள் தேவையான மாற்றங்களைச் செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.

புதிய அம்சத்தால் வேலை தேடுவது சுலபமாக்கப்பட்டாலும், இனி ஃபேஸ்புக்கில் எதையும் பதிவேற்றம் செய்யும் முன் ஒரு முறைக்கு இரு முறை யோசித்தே செய்யுங்கள்.

உங்களது எதிர்கால முதலாளி உங்களை ஃபேஸ்புக் வழி கண்காணித்துக்கொண்டிருந்தாலும் இருக்கலாம்!


 

Top