Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வாட்ஸப், டெலகிராமில் பாதுகாப்புக் குறைபாடு

வாட்ஸப் அல்லது டெலகிராம் குறுஞ்செய்தி அனுப்பும் கணக்குகளில் குறைபாடு உள்ளதால் அவற்றிலுள்ள தகவல்கள் ஊடுருவப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாகக் கணினிப் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸப் அல்லது டெலகிராம் குறுஞ்செய்தி அனுப்பும் கணக்குகளில் குறைபாடு உள்ளதால் அவற்றிலுள்ள தகவல்கள் ஊடுருவப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாகக் கணினிப் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறுஞ்செய்தித் தகவல்களைப் பாதுகாக்கும் நோக்கில் பயன்படுத்தப்படும் மறைக்குறியீடாக்கத்தைக்(encryption) கொண்டே ஊடுருவல் நடைபெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலகிராம், பேஸ்புக் நிறுவனங்களுக்கு இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதாக Check Point Software Technologies நிறுவனம் சொன்னது.

வாட்ஸப், டெலகிராம்-இவற்றில் எத்தனை கணக்குகள் ஊடுருவப்படும் ஆபத்தில் உள்ளன என்னும் விவரத்தை, அந்த நிறுவனம் குறிப்பிடவில்லை.

ஆனால், வாட்ஸப் குறுஞ்செய்தியைக் கணினி வாயிலாகப் பயன்படுத்தும் மில்லியன் கணக்கான பயனீட்டாளர்கள் அந்தக் குறைபாட்டால் பாதிப்புக்குள்ளாகக் கூடுமென அது குறிப்பிட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்