Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

Whatsappக்கு நீதிமன்றம் தடை: அதிர்ச்சியில் மக்கள்

பிரேசிலில் Whatsapp-ஐ 48 மணி நேரத்துக்கு தடை செய்ய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சாவ் பாலோ: பிரேசிலில் Whatsapp-ஐ 48 மணி நேரத்துக்கு தடை செய்ய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல கைபேசி செயலியான Whatsapp-ஐ நாடு முழுவதிலும் அடுத்த 48 மணி நேரத்துக்கு தடை செய்ய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றமான சாவ் பாலோ நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றவியல் புலன்விசாரணைக்கு ஒத்துழைக்கக் கோரி பலமுறை அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்ட போதிலும் அதனை ஏற்க மறுத்து வந்ததால் இந்தத் தடை விதிக்கப்படுவதாக உத்தரவை வழங்கிய நீதிபதி தெரிவித்தார்.

பிரேசிலில் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்படுவது இதற்கு முன் நடந்ததில்லை என்பதால் அந்தத் தடை அந்நாட்டு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்