Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

தொழில்நுட்பம்

மீட்டுக்கொள்ளப்படவிருக்கும் சாம்சுங் கைபேசிகள்

சாம்சுங் நிறுவனத்தின் கேலெக்ஸி நோட் 7 கைபேசிகள் மீட்டுக்கொள்ளப்படிம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வாசிப்புநேரம் -
மீட்டுக்கொள்ளப்படவிருக்கும் சாம்சுங் கைபேசிகள்

சாம்சுங் கேலெக்ஸி நோட் 7 கைபேசிகள் (படம்: Reuters)

சாம்சுங் நிறுவனத்தின் கேலெக்ஸி நோட் 7 கைபேசிகள் மீட்டுக்கொள்ளப்படிம் என எதிர்பார்க்கப்படுகிறது. கைபேசிகளை மின்னேற்றம் செய்யும்போது அவை வெடிப்பதாகப் புகார்களைப் பெற்றதாக Yonhap செய்தி நிறுவம் தெரிவித்தது.

வெடிப்புகளுக்கும் கைபேசிகளின் மின்கலங்களுக்கும்

தொடர்பிருக்கலாம் என்று சாம்சுங் நிறுவன ஊழியர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

வெடிப்புச் சம்பவங்களின் தொடர்பில் சாம்சுங் நிறுவனம் தற்போது விசாரணை நடத்துகிறது. அடுத்த வாரம் அதன் முடிவுகளையும் பிரச்சனையைக் கையாளும் முறைகளையும் வெளியிடுவதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த பிரச்ச்னையினால் கேலெக்ஸி நோட் 7 கைபேசிகளின் ஏற்றுமதிகளும் தடைபட்டன. சாம்சுங் நிறுவனத்தின் சந்தைமதிப்பு சுமார் 7 பில்லியன் இழப்பைச் சந்தித்துள்ளதாக Reuters செய்தி நிறுவனம் தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்