Images
  • 20Apr Bagging rights: Taking automated checkouts to the next level (1)

இயந்திரங்கள் மூலம் கட்டணம் செலுத்தும் முறை: அடுத்த படிக்கு எடுத்துச்சென்ற பானாசோனிக்

தற்போது நாம் பேரங்காடி நிலையங்களுக்குச் சென்றால், வாங்கும் பொருட்களைக் காசாளர் இல்லாமல் சொந்தமாகவே தானியக்க இயந்திரங்கள் மூலம் கட்டணம் செலுத்தலாம்.

பானாசோனிக் நிறுவனமோ அதற்கு ஒரு படி மேல் சென்றுள்ளது. பொருட்களை அடுக்குகளிலிருந்து கூடையில் வைக்கும்போதே பொருட்களின் விலை கணிக்கிடப்படுகிறது. பணம் கட்டுவதற்கு முன் பொருட்களை இயந்திரம் தானாகவே பிளாஸ்டிக் பைகளில் போடுகிறது. கட்டணம் மட்டும் செலுத்துவதுதான் நம் வேலை.

"ரெஜி ரோபோ" எனப்படும் இந்த அறிவார்ந்த கட்டணமுறை ஜப்பானில் லாவ்சன் பேரங்காடி நிலையங்களில் நடப்பில் உள்ளது. இந்தக் கட்டணமுறைக்கு வரவேற்பு அதிகரித்தால் எதிர்காலத்தில் கட்டணமுறையை மேலும் எளிதாக்க முனைகிறது லாவ்சன் நிறுவனம்.

Top