Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

இருந்த இடத்திலிருந்து உலகைச் சுற்றி வர ஆசையா?

கூகுள் நிறுவனம் தனது உலக வரைப்படச் சேவையான கூகுள் ஏர்த்தை மேம்படுத்தியுள்ளது. 

வாசிப்புநேரம் -

கூகுள் நிறுவனம் தனது உலக வரைப்படச் சேவையான கூகுள் ஏர்த்தை மேம்படுத்தியுள்ளது. இதற்கு முன் செயலி வாயிலாக மட்டுமே கிடைக்ககூடிய இந்தச் சேவை முதல் முறையாக கூகுள் ஏர்த் இணையப்பக்கத்தின் வாயிலாக பயன்படுத்தலாம்.

நமது இருக்கையில் அமர்ந்தவாறு புவியைச் சுற்றி பார்க்கும் வாய்ப்பைச் சேவை வழங்குகிறது. "Feeling Lucky" எனும் அம்சத்தைப் பயன்படுத்தினால் கூகுள் ஏர்த், இதற்கு முன் நாம் கேள்விப்படாத இடங்களை நமக்குக் காட்டும். அந்த இடங்களைப் பற்றிய மேல் விவரங்களையும் சேவை காட்டும். முப்பரிமாண வடிவில் இந்த இடங்களைக் கண்டு ரசிக்கலாம்.

சேவையைப் பயன்படுத்துவோர், கூகுள் ஏர்த்தில் காணும் இடங்களைப் படமெடுத்து அஞ்சல் அட்டையாக தமது நண்பர்களுக்கும் அனுப்பலாம்.

கண்காணா தூரத்தில் உள்ள இடங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வது இந்தச் சேவையின் நோக்கம் எனக் கூறியுள்ளது கூகிள் நிறுவனம்.

தற்போது கூகுள் ஏர்த் சேவை, குரோம் உலாவி மென்பொருள் இணையப்பக்கத்திலும், ஆண்ட்ரோய்ட் திறன்பேசியிலும் கிடைக்கிறது. விரைவில் ஆப்பிள் திறன்பேசிகளிலும் மற்ற உலாவி மென்பொருட்களிலும் அது அறிமுகமாகும் என கூகுள் தெரிவித்துள்ளது.










விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்