Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஃபேஸ்புக் கையாளும் விதிமுறைகள் அம்பலம்

வெறுப்பைத் தூண்டிவிடும் வகையிலான பதிவுகளுடன், பயங்கரவாதம், ஆபாசப்படங்கள், தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்வது தொடர்பான உள்ளடக்கங்களைக் கொண்ட பதிவுகளைத் தணிக்கை செய்ய ஃபேஸ்புக் கையாளும் விதிமுறைகளைக் கண்டறிந்திருப்பதாக, பிரிட்டனின் கார்டியன் நாளேடு கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -

சென்ற ஆண்டில் அதன் தொடர்பில் 100க்கும் அதிகமான ஆவணங்களை ஃபேஸ்புக் அதன் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ளதைக் கண்டறிந்ததாக அந்த நாளேடு குறிப்பிட்டது.

பயனீட்டாளர்கள் தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொள்ளும் சம்பவங்களை நேரடியாக ஒளிபரப்பும் முயற்சிகளை ஃபேஸ்புக் அனுமதிக்கிறது.

மனஉளைச்சலால் அவதியுறுவோரைத் தண்டிக்கவோ, தணிக்கை செய்யவோ விரும்பவில்லை என்று அது கூறுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்