Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

தொழில்நுட்பம்

வியர்வை நாற்றத்தைத் துரத்தியடிக்கும் பை

உடற்பயிற்சி கூட செய்துவிடலாம். ஆனால் உடற்பயிற்சி பையைச் சுத்தம் செய்வது இருக்கிறதே...அப்பப்பா! அதுதான் பெரிய வேலை! 

வாசிப்புநேரம் -
வியர்வை நாற்றத்தைத் துரத்தியடிக்கும் பை

பேக்சுல் என்று அழைக்கப்படும் தாமாகவே சுத்தம் செய்துகொள்ளும் புதிய உடற்பயிற்சி பை ஒன்று அறிமுகம் கண்டுள்ளது. (படம்: Paqsule's YouTube channel)

உடற்பயிற்சி கூட செய்துவிடலாம். ஆனால் உடற்பயிற்சி பையைச் சுத்தம் செய்வது இருக்கிறதே...அப்பப்பா! அதுதான் பெரிய வேலை!

அப்படி புலம்புவர்களில் ஒருவரா நீங்கள்? உங்களுக்கான செய்திதான் இது!

பேக்சுல் என்று அழைக்கப்படும் தாமாகவே சுத்தம் செய்துகொள்ளும் புதிய உடற்பயிற்சி பை ஒன்று அறிமுகம் கண்டுள்ளது.

பட்டனை அழுத்தினால் போதும், பையினுள் UV-C ஒளிக்கதிர்கள் வெளியாகி வியர்வை படிந்த உடைகளிலும், துண்டுகளிலும் உள்ள கிருமிகளையும், நாற்றத்தையும் நீக்கி நறுமணம் பரப்புகிறது.

உங்கள் வியர்வையைச் சுத்தம் செய்யும் அந்தப் பைக்கு நீங்கள் கொடுக்கவேண்டிய விலை, $320.

அப்புறம் என்ன?

இனி காலையில் 'ஜிம்முக்கு' போய்விட்டு 'ஜம்மென்று' அலுவலகம் செல்லவேண்டியதுதான்!
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்