Images
  • samsung
    சாம்சுங் நிறுவனத்தின் சின்னம். (படம்: Reuters)

சாம்சுங் சலவை இயந்திரங்கள் வெடிக்கின்றனவா?

சாம்சுங் (Samsung) நிறுவனம், அதன் சலவை இயந்திரங்கள் குறித்த பாதுகாப்பு அக்கறைகளையொட்டிய பேச்சில் ஈடுபட்டுள்ளது.

அந்த இயந்திரங்கள் வெடிப்பதாகக் கிடைத்த புகார்களைத் தொடர்ந்து அந்தப் பேச்சு நடக்கிறது.

அமெரிக்கப் பயனீட்டாளர்ப் பொருள் பாதுகாப்பு ஆணையத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருப்பதாக சாம்சுங் சொன்னது.

2011ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் உற்பத்தி செய்யப்பட்ட சலவை இயந்திரங்களில் பிரச்சினை இருப்பதாகக் கூறப்பட்டது. 

Top