Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

சீனப் புத்தாண்டிற்கு இணைய பணப் பொட்டலங்களைப் பகிர்ந்துகொண்ட WeChat பயனீட்டாளர்கள்

சீனப் புத்தாண்டுக் காலத்தில், கைபேசி சமூகத் தளமான WeChat மூலம் 46 பில்லியன் இணையப் பணப் பொட்டலங்களைப் பகிர்ந்துகொண்டனர் WeChat பயனீட்டாளர்கள்.

வாசிப்புநேரம் -

பெய்ச்சிங்: சீனப் புத்தாண்டுக் காலத்தில், கைபேசி சமூகத் தளமான WeChat மூலம் 46 பில்லியன் இணையப் பணப் பொட்டலங்களைப் பகிர்ந்துகொண்டனர் WeChat பயனீட்டாளர்கள்.
சீனப் புத்தாண்டின்போது, சிவப்புப் பொட்டலங்களை வழங்குவதைச் சீனா பாரம்பரியமாகக் கொண்டுள்ளது.

சீனாவின் கைபேசிச் சந்தை வளர்ச்சியை மேலும் வளர்க்க அலிபாபா குழுமம் இணையத்தில் சிவப்புப் பொட்டலங்களை விளம்பரப்படுத்தியுள்ளது.

WeChat சமூகத் தளத்தின் மூலம் பகிரப்பட்ட இணையச் சிவப்புப் பொட்டலங்களின் எண்ணிக்கை ஓராண்டுடன் ஒப்பிடுகையில், ஜனவரி 27ஆம் தேதிக்கும் பிப்ரவரி முதல் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் 43 விழுக்காடு உயர்ந்துள்ளது.

2011ஆம் ஆண்டு அறிமுகம் கண்டதிலிருந்து, WeChat, சீனாவின் மிகப் பிரபலமான கைபேசிச் சமூகத் தளமாக உருவெடுத்துள்ளது.

குறுந்தகவல், இசை, காணொளி செய்திகளை இலவசமாக அனுப்புவதோடு, பயனீட்டாளர்கள், WeChat மூலம் நன்கொடை வழங்கவும் விமானச் சீட்டுகளை வாங்கவும் செய்கின்றனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்