Images
  • 9Feb Facebook adds tool for helping in times of crisis (1)

இக்கட்டான சூழ்நிலையில் உதவும் ஃபேஸ்புக்கின் புதிய அம்சம்

சான் பிரான்சிஸ்கோ: ஃபேஸ்புக் நேற்று அதன் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்தியது.

புதிய சமூக உதவி அம்சம் வெள்ளம், நிலநடுக்கம், தீச்சம்பவம், விபத்துகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குகிறது.

பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவி கிடைப்பதற்கு வகைசெய்யும் பாதுகாப்பு அம்சம் ஒன்றை 2014 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியது.

அதன் மூலம், குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என ஃபேஸ்புக் உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள அது வகைசெய்கிறது.


Community Help என்ற அந்தப் பாதுகாப்பு அம்சம், தற்போது, மக்கள் உதவி நாடுவதற்கும் உதவி வழங்குவதற்கும் கைகொடுக்கிறது.






Top