Images
  • samsung (1)
    (படம்: AFP)

சாம்சுங்கின் புதிய கைபேசி - கேலக்ஸி S8 அறிமுகம்

சாம்சுங் நிறுவனம் அதன் புத்தம்புதிய கேலக்ஸி S8 கைபேசிகளைப் பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டுவந்துள்ளது.

சென்ற ஆண்டு மிகவும் சவால்மிக்கதாய் இருந்தது; இருப்பினும், சந்தையில் தடம் பதிப்போம் என்று உறுதி தெரிவித்தார், அறிமுக விழாவில் பேசிய நிறுவனத்தின் கைபேசிப் பிரிவுத் தலைவர் திரு DJ கோ.

தென் கொரியாவின் முன்னணி நிறுவனமான சாம்சுங் சென்ற ஆண்டு வெளியிட்ட கேலக்ஸி நோட் 7 கையடக்கக் கருவிகளின் மின்கலன்கள் தீப்பற்றிக்கொண்டன.

அதனையடுத்து, நிறுவனத்தின் நற்பெயருக்குப் பெரும் களங்கம் ஏற்பட்டது. நோட் 7 கருவிகளைச் சந்தையிலிருந்து மீட்டுக்கொள்ளும் சூழலும் ஏற்பட்டது. 

அதனைத் தொடர்ந்து சந்தையில் மீண்டும் பெயரை நிலைநாட்டிக்கொள்ள பெரும்பாடுபட்டு வந்தது சாம்சுங்.
 

Top