Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அண்மையில் அதிகமானோருக்குப் பற்களில் வெடிப்பு ... காரணம்?

கடந்த 6 ஆண்டுகளைக் காட்டிலும், கடந்த 6 வாரங்களில் அதிகமான பல் தெறிக்கும் சம்பவங்களைக் கண்டதாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு பல் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

கடந்த 6 ஆண்டுகளைக் காட்டிலும், கடந்த 6 வாரங்களில் அதிகமான பல் தெறிக்கும் சம்பவங்களைக் கண்டதாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு பல் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

தாடை வலி, பல் கூச்சம், கன்னத்தில் வலி, ஒற்றைத் தலைவலி தொடர்பாக வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்ததாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது, ஒரு நாளைக்குச் சராசரியாக 4 பேர் பல் உடைவது தொடர்பாக அவரை நாடுவதாக New York Times செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அதன் தொடர்பில் வேறு சில பல் மருத்துவர்களையும் நாடி, அறிக்கை வெளியிட்டிருந்தது New York Times.

காரணம் என்ன?

1. மன அழுத்தம்...

கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தால், பலரும் தங்கள் பற்களை நற நறவெனக் கடிக்கின்றனராம்.

அது பற்களுக்குச் சேதம் விளைவிக்கலாம்.

2. வீட்டிலிருந்து வேலை பார்ப்பது...

வீட்டிலிருந்து வேலை பார்க்கும்போது, சரியாக உட்காராமல்போனால், அது இரவு நேரத்தில் பல் அறைக்கும் பிரச்சினையாக உருவெடுக்கலாம்.

ஏனென்றால், கழுத்து, தோள்பட்டையில் உள்ள நரம்புகள், தாடையோடு தொடர்புடையவை.

3. தூக்கப் பற்றாக்குறை...

கிருமித்தொற்று ஏற்படுத்திய மன அழுத்தத்தால், மனநிலை எந்நேரமும் தயார் நிலையிலேயே உள்ளது.

அதனால், தூங்கவோ ஓய்வு எடுக்கவோ முடியாமல், அந்தப் பதற்றம் நேராகப் பற்களுக்குச் செல்கின்றன.

தீர்வு?

உணவு உட்கொள்ளும்போது மட்டும் தான், பற்கள் ஒன்றை ஒன்று தொட வேண்டும்.

மற்ற நேரங்களிலும், பற்கள் ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டே இருந்தால், அது சேதம் விளைவிப்பதற்கான அறிகுறி.

உதடுகள் மூடி இருக்கும்போது. தாடையைத் தளர்த்தி, பற்களுக்கு இடையே சற்று இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தேவைப்பட்டால், Retainers எனப்படும் பற்களின் நிலையைத் தக்க வைத்துக்கொள்ளப் பயன்படுத்தும் பொருளைப் பகல் நேரத்தில் போட்டுப் பழகலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்