Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

குழந்தைகளுடன் கேளிக்கைப் பூங்கா செல்கிறீர்களா?

விடுமுறைக் காலங்களில் கூட்டம் அதிகம் இருப்பதால் முன்கூட்டியே திட்டமிட்டு சீட்டு வாங்குவது நல்லது, இதனால் பல சலுகைகளும் கிடைக்கும்.

வாசிப்புநேரம் -
குழந்தைகளுடன் கேளிக்கைப் பூங்கா செல்கிறீர்களா?

(படம்: Pixabay)

விடுமுறை தினங்களில் கேளிக்கைப் பூங்காவிற்குச் செல்லவேண்டும் என்பது குழந்தைகளின் தீரா ஆசை. அதை எப்படி மறக்கமுடியாத நிகழ்வாக மாற்றுவது?

திட்டமிட்டு சீட்டு வாங்க வேண்டும்:
விடுமுறைக் காலங்களில் கூட்டம் அதிகம் இருப்பதால் முன்கூட்டியே திட்டமிட்டு சீட்டு வாங்குவது நல்லது, இதனால் பல சலுகைகளும் கிடைக்கும்.

ஆண்டு அனுமதி நுழைவுசீட்டு வாங்கலாம்:
சிலநேரம் மோசமான வானிலை, உடல் நலக்குறைவு, அதிகக் கூட்டம் போன்றவற்றால் பல சவாரிக்குப் போகமுடியாமல் போகலாம். இதனால் ஆண்டுச் சீட்டுகளாக வாங்குவது நல்லது.

சரியான நாளைத் தேர்ந்தெடுங்கள்:
வாரயிறுதி மற்றும் பொதுவிடுமுறை நாட்களைத் தவிர்த்தால், எல்லா சவாரிகளுக்கும் செல்லும் வாய்ப்புக் கிடைக்கும், கூட்ட நெரிசலில் சிக்கிச் சிரமப்படத் தேவையில்லை. விரைவுச் சீட்டு வாங்குவதும் நல்லது.

எங்கு நேரத்தைச் செலவிடவேண்டும்:
குழந்தைகளுக்குப் பிடித்த சவாரிகளையும், எந்த இடத்தில எந்த நிகழ்ச்சி நடக்கிறது என்பதையும் முன்கூட்டியே தெளிவாக தெரிந்து கொள்ளவேண்டும்.

தேவையைத் தேர்ந்தெடுங்கள் :
வானிலையைப் பொறுத்து சிறுவர்களுக்கான உடையைத் தேர்தெடுங்கள், முடிந்தால் சருமக் களிம்புகளை எடுத்துச்செல்லாம். 

கவனம் முக்கியம்:
கூட்ட நெரிசல்களில் குழந்தைகள் வழிதவறிப் போவது சுலபம், இதனால் அவர்களுக்கு தகுந்த அறிவுறுத்தல்கள் தருவது முக்கியம்.

தொடர்பு கொள்ள வசதி: கைத்தொலைபேசி எண், வீட்டு முகவரி போன்றவற்றைக் கற்பிக்க வேண்டும்.

உணவு, கழிப்பறை, நீர்:
குழந்தைகள் அதிகநேரம் விளையாடும்போது அவர்களுக்குத் தேவையான உணவும், நீரும் உடன் எடுத்துச் செல்வது முக்கியம். கழிப்பறைக்குச் செல்லும் பாதையைத் தெரிந்துவைத்துக் கொள்வதும் நல்லது.

இதனுடன் குழந்தைகளுடன் குழந்தையாகவே மாறி புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது என்றும் அழியா நினைவுகளே.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்