Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உறங்குவதற்கு முன்னர் என்ன செய்யக்கூடாது?

தூங்குவதற்கு முன்பு என்னென்ன செய்யக்கூடாது என்று உங்களுக்குத் தெரியுமா?

வாசிப்புநேரம் -
உறங்குவதற்கு முன்னர் என்ன செய்யக்கூடாது?

(படம்: AFP)

தூங்குவதற்கு முன்பு என்னென்ன செய்யக்கூடாது என்று உங்களுக்குத் தெரியுமா?

1) இரவில் தூங்கும்போது உணவைச் செரிமானம் செய்யும் உறுப்புகளும் ஓய்வு வேண்டும். தூங்குவதற்கு முன்னர் அதிகமாகச் சாப்பிட்டால், அதனை செரிமானம் செய்யும் உறுப்புகள் போதிய ஓய்வில்லாமல் வேலை செய்யும்.

2) உறங்குவதற்கு முன்னர் திரைப்படங்களைப் பார்ப்பது சிலருக்கு வழக்கமான ஒன்றாக இருக்கலாம். ஆனால், திகில் படங்கள் மனத்துக்கு ஓய்வளிக்காமல் மன உளைச்சலை உண்டாக்கும். தூங்குவதற்கு முன்னர் அத்தகைய திரைப்படங்களைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம்.

3) தூங்குவதற்கு முன்னர் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தும் போக்கை தவிர்க்கலாம். சாதனங்கள் வெளியிடும் ஒளி, உடலில் தூக்கத்துக்கு உதவும் ஹார்மோன் சுரக்காமல் தடுக்கிறது. அதற்கு பதிலாக, நூல் வாசித்தல், தியானம் செய்தல் ஆகிய நடவடிக்கையில் ஈடுபடலாம்.

4) உறங்குவதற்கு முன், மற்றவர்களுடன் ஆழமான உரையாடலில் ஈடுபடவேண்டாம். சில நேரங்களில், உரையாடல்கள் வாக்குவாதத்தில் முடிவதற்கு வாய்ப்பிருக்கலாம். அவ்வாறு உரையாடும்போது மன உளைச்சல் ஏற்படலாம். தூக்கம் வருவதற்கு முன்னர் மனத்தை அமைதியாக வைத்துக்கொள்வது நல்லது.

5) காப்பி, தேநீர் ஆகிய பானங்களைத் தவிர்ப்பது நல்லது. அவற்றில் இருக்கும் 'கஃபீன்' உடலை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுமே தவிர தூக்கத்திற்கு உடலைத் தயார்படுத்த உதவாது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்