Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

முக சருமத்தைப் பாதுகாக்க... இந்த 8 பழக்கத்தைக் கைவிடவேண்டும்

பல சருமப் பொருள்களைப் பயன்படுத்தியும், முகத்தில் பொலிவு இல்லாததுபோல் சிலர் உணரலாம்.

வாசிப்புநேரம் -

பல சருமப் பொருள்களைப் பயன்படுத்தியும், முகத்தில் பொலிவு இல்லாததுபோல் சிலர் உணரலாம்.

பொருள்கள் தான் சரியில்லை என்று குறைகூறுவதற்கு முன், பழக்க வழக்கங்களைச் சற்று பரிசீலித்துப் பார்க்கலாம்.

முக சருமத்தைப் பாதிக்கும், செய்யக்கூடாத 8 பழக்கங்கள் குறித்து விவரிக்கின்றனர் நிபுணர்கள்....


போதிய தூக்கமின்மை

தூங்கும்போது தான், முக சருமத்தில் கொலாஜன் (collagen) என்ற புரதம் சுரக்கிறது.

சூரியக் கதிர்களால் ஏற்பட்ட பாதிப்புகளை அது சீர் செய்ய உதவும்.

போதுமான, தரமான தூக்கம் இல்லையென்றால், சருமம் விரைவாக மூப்படைவதோடு, தன்னைத் தானே சீர் செய்துகொள்ளும் தன்மையும் பலவீனமாகிவிடும்.


Sunscreen திரவத்தைப் பயன்படுத்தாதது

நீண்ட நேரம் வெயிலில் இருப்பதால், சுருக்கங்கள், காய்ந்த சருமம், நிற பாதிப்பு (pigmentation) ஆகியவை விரைவாக ஏற்படலாம்.

அதனால், Sunscreen திரவம் பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.


தவறான பொருள்களைப் பயன்படுத்துவது

சருமத்திற்குத் தகுந்த பொருளைப் பயன்படுத்தாவிட்டால், அதன் பலன்களைப் பெற முடியாது.

மேலும், ஏற்கெனவே உள்ள சருமப் பிரச்சினைகளை அவை மோசமாக்கலாம்.


முக ஒப்பனையைக் கழுவாமல் இருப்பது

இரவில் முக ஒப்பனையைக் கழுவாமல் தூங்கினால், அது நாள் முழுவதும் முகத்தில் படிந்த அழுக்கு மாசுகளுடன் சேர்ந்து முகத்தில் உள்ள துளைகளை (pores) அடைக்கலாம்.


பருக்களை உடைப்பது

முகத்தில் உள்ள துளைகள் அடைக்கப்படும்போது பருக்கள் உருவாகும்.

அவற்றைத் தொடுவதோ உடைப்பதோ பிரச்சினையை மோசமாக்கக்கூடும்.

அதிக பருக்கள் உருவாவதோடு, தழும்புகளும் ஏற்பட வாய்ப்புண்டு.


போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது

சரும உயிரணுக்களைப் பிரகாசமாக்குவது தண்ணீர் என்று கூறப்படுகிறது.

போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால், முகம் காய்ந்து, பொலிவின்றிக் காணப்படும்.


வெந்நீரில் முகம் கழுவுவது

வெந்நீரில் முகம் கழுவுவதால், சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்கள் நீக்கப்படுகின்றன.

அதனால், சரும எரிச்சல் ஏற்படலாம்.

முகம் கழுவும்போது, தண்ணீரின் வெப்பநிலை குளிராகவும் இருக்கக்கூடாது, சூடாகவும் இருக்கக்கூடாது.


ஒப்பனைச் சாமன்களைச் சுத்தம் செய்யாதது

ஒப்பனைச் சாமான்களைச் சுத்தம் செய்யாவிட்டால், அவை கிருமிகளின் வசிப்பிடமாக மாறிவிடும்.

அதனால், அடிக்கடி பயன்படுத்தும் சாமன்களை வாரம் ஒரு முறையாவது கழுவுவது முக்கியம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்