Images
  • to handle kids (1)

விமானப் பயணத்தின்போது பிள்ளைகள் பதறாமல் இருக்க பெற்றோர் என்ன செய்யலாம்?

விமானப் பயணத்தின்போது சில பெரியவர்களுக்கே பதற்றமாக இருக்கும். குழந்தைகளுக்குச் சொல்லவா வேண்டும்?
ஓடித் திரியும் பிள்ளைகளை சில மணி நேரம் ஒரே இருக்கையில் அமர வைப்பது எளிதல்ல. சில வேளைகளில் பயண நேரம் முழுவதும் பிள்ளைகள் அழுதுகொண்டே இருக்கலாம்.அது சக பயணிகளுக்கும் மனவுளைச்சலை ஏற்படுத்தலாம்.

விமானப் பயணத்தின்போது பிள்ளைகளின் பதற்ற நிலையைக் குறைக்கப் பிள்ளை நடத்தை வல்லுநர்களும், விமான ஊழியர் சங்கத்தினரும் சில வழிகளைப் பரிந்துரைக்கின்றனர்.

விமானத்தில் பயணம் செய்வது உறுதியானவுடன் அது பற்றிப் பிள்ளைகளிடம் பெற்றோர் பேசுவது நல்லது.

சிறிய பகுதி, பயணத்தின்போது இடையில் வெளியே செல்ல இயலாது, பயண நேரம், இருக்கை வார் அணிய வேண்டும், காற்றழுத்த மாற்றத்தால் காதுகள் அடைக்கும் உணர்வு ஏற்படும் போன்ற விவரங்களை பிள்ளைகளோடு பகிர்ந்துகொள்ளுதல் உதவும்.

விமானத்தில் தெரியாத முகங்கள் பலரைச் சந்திக்க வேண்டும் என்றும் அவர்களுக்குச் சொல்வது அவசியம்.

பிள்ளைகளின் கவனத்தைத் திசை திருப்புவதற்கு இனிப்புவகைகள், விளையாட்டுப் பொருட்கள், கதை புத்தகங்கள் போன்ற சில பொருட்களைப் பெற்றோர் எடுத்துச்செல்லலாம்.

விமானி சொல்வதைக் கேட்டு நடந்துகொள்ள வேண்டும் என்று பிள்ளைகளிடம் வலியுறுத்த வேண்டும். விமானத்தின் நடைபாதைகளில் அதிக நேரம் நடக்கவோ ஓடவோ முடியாது என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு எளிதில் அலுப்புத் தட்டிவிடும் என்பதைப் பெற்றோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

பிள்ளைகளைத் தனிமைப்படுத்துவது. அவர்களின் கவனத்தைத் தக்கவைத்துக்கொள்ளப் பெற்றோரும் அவர்களோடு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். வண்ணம் தீட்டுதல், புத்தகம் படித்தல், இசை, படம் பார்ப்பது போன்றவற்றைச் செய்யலாம்.

விமான ஊழியரின் உதவியைப் பெற்றோர் நாடலாம்.
பிள்ளைகளின் நடத்தையால் பாதிக்கப்படும் பிற பயணிகளையோ பிள்ளைகளையோ சமாதானப்படுத்த அவர்கள் உதவக்கூடும் என்று விமான ஊழியர் சங்கம் சொன்னது.
 

Top