Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அதி தீவிர உடற்பயிற்சி ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல - புதிய ஆய்வு

அதி தீவிரமாக உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

வாசிப்புநேரம் -

அதி தீவிரமாக உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதுபற்றி The New York Times நிறுவனம் செய்தி வெளியிட்டது.

HIIT எனும் high-intensity interval training உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அவர்கள் உடலின் மைட்டோகாண்ட்ரியா (mitochondria) செயல்பாட்டில் திடீர் பாதிப்புகள் ஏற்பட்டதாக ஆய்வில் தெரியவந்தது.

மைட்டோகாண்ட்ரியா என்பது உயிரணுக்களில் வேதி மாற்றம் ஏற்படுத்தும் அமைப்பு.

HIIT முறையில், சில நிமிடங்கள் ஓய்வெடுத்தப் பிறகு, தொடர்ச்சியான, சுருக்கமான இடைவெளிகளில் கடினமான உடற்பயிற்சிகள் தொடரும்.

அதனால், உயிர் அணுக்கள், வளர்சிதை மாற்றம் வளர்ச்சி(metabolism) போன்ற
நன்மைகள் ஏற்படலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால், New York Times செய்தியில் தீவிர உடற்பயிற்சி செய்பவர்களின் ரத்த அழுத்தம் அல்லது உடல் கொழுப்பு மிதமாக உடற்பயிற்சி செய்பவர்களைவிட மேம்படவில்லை என்று கூறப்பட்டது.

அந்த புதிய ஆய்வு, Cell Metabolism எனும் ஆய்விதழில் வெளியிடப்பட்டது.

11 ஆரோக்கியமான ஆண்களும் பெண்களும் ஆய்வில் கலந்து கொண்டனர்.

ஒரு மாத காலச் சோதனைக்குப் பிறகு, மேம்பட்ட ஆரோக்கியம் பெற விருப்பப்பட்டால், HIIT உடற்பயிற்சியை அதிகமாக செய்யக்கூடாது என்று ஆய்வை மேற்கொண்ட ஸ்வீடிஷ் விளையாட்டு, சுகாதார அறிவியல் பள்ளியின் முனைவர் மாணவர் Mikael Flockhart கூறினார்.

அதி தீவிர உடற்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் முதலில் சிறிதாகத் தொடங்க வேண்டும் என்றார் அவர்.

வாரத்தில் சில முறை தீவிர உடற்பயிற்சி செய்துவிட்டு, மீதமுள்ள நாட்களில், நடைப்பயிற்சி போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று New York Times செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்