Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பல் வலிக்கு வீட்டிலேயே கிடைக்கும் நிவாரண வழிகள்

பல் வலிக்கு வீட்டிலேயே கிடைக்கும் நிவாரண வழிகள்

வாசிப்புநேரம் -

1. கிராம்பு எண்ணெய்

கிராம்பில் உள்ள இயுஜனொல் (eugenol) எனும் இரசாயனம் இயற்கையானதொரு வலி நிவாரணி.

ஆனால் அதைக் கவனமாகப் பயன்படுத்தவேண்டும்.

எளிதில் கூசக்கூடிய வாய்ப் பகுதியில் கிராம்பு எண்ணெயை ஊற்றக்கூடாது.

இரண்டு சொட்டுக் கிராம்பு எண்ணெயில் நனைத்த பஞ்சை வலி ஏற்பட்டுள்ள பல்லில் வைக்கலாம். பின் வலி ஏற்பட்டுள்ள பல்லில் முழுமையாகவோ பொடியாகவோ கிராம்பை வைக்கலாம்.

சுமார் அரை மணிநேரத்தில் பல் வலி குறையும்.

2. உப்புத்தண்ணீரால் வாயைக் கொப்பளித்தல்

ஒரு குவளை தண்ணீரில் அரைத் தேக்கரண்டி உப்பைக் கலந்திடலாம்.

அந்த நீரை வாயில் கொப்பளித்து உமிழ்ந்திடுங்கள்.

பல் வலி குறையக்கூடும்.

3. புதினாத் தேயிலை கொண்ட பைகள்

புதினா சுவை கொண்ட தேயிலைப் பொட்டலங்களைப் பயன்படுத்தியதும் வீசிவிடவேண்டாம்.

தேநீர் செய்ததும் அந்தப் பொட்டலத்தின் சூடு தணிவதற்குக் காத்திருங்கள். பின் வெதுவெதுப்பாக இருக்கும் அதனை வலி உள்ள இடத்தில் வைக்கலாம்.

அல்லது அதனைக் குளிர்பதனப் பெட்டியின் உறை பகுதியில் வைத்திடுங்கள். சில நிமிடங்களில் அதையெடுத்து வலி மிகுந்த பல்லில் வைத்தால் வலி குறையக்கூடும்.

4. பூண்டு

பூண்டை வாயில் மெல்லலாம்.

அல்லது பூண்டை இடித்துப் பசையாக்கி அதில் சிறிதளவு உப்பைக் கலந்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவலாம்.

கிருமிகளைக் கொன்று பல்லில் கறை படியாமல் இருக்க பூண்டு உதவும். அதோடு பல் வலியைக் குறைக்கக்கூடிய ஆற்றலும் அதற்கு உண்டு.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்