Images
  • toothpick
    (படம்: Freepik/wirestock)

பல் குத்தியால் பல்லீறுகள் பாதிப்படையக்கூடும்

ரசித்து ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது சில வேளைகளில் உணவு பற்களின் இடுக்கில் மாட்டிக்கொள்வது பெரும் தொல்லை!

விரல் நகங்களை வைத்து சிலர் மாட்டிக்கொண்ட உணவை விடுவிக்க முயற்சி செய்யலாம். ஆனால் பல வேளைகளில் அது கூடுதல் பிரச்சினையைத் தான் உருவாக்கும்.

அத்தகைய சூழலில் பலர் உடனே எடுப்பது : பல்குத்தி!

ஒருவழியாக, சிக்கியிருந்த உணவை வெளியே எடுத்தாலும், கூர்மையான பல் குத்தியால் பல்லீறுகள் சேதமடையலாம்.

தவறான முறையில் வலுக்கட்டாயமாகப் பல் குத்தியைப் பயன்படுத்தும்போது அவை உடையலாம்.

அதனால் பல்லீறுகள் காயமடைந்து அதுவே கிருமித்தொற்று ஏற்படுவதற்குக் காரணமாகலாம் என்று பல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே பற்களில் சிகிச்சை செய்யப்பட்டிருந்தால் பல் குத்திகளால் அதற்குப் பாதிப்பு ஏற்படும் சாத்தியமும் உண்டு.

சிறிதாகவும் வசதியாகவும் இருக்கிறது என்பதற்காகப் பலர் பல் குத்திகளைப் பயன்படுத்துகின்றனர்.

எனினும் அதனால் ஏற்படும் பாதகங்களே அதிகம். பற்களில் ஏதேனும் சிக்கிக் கொண்டு வெளியே எடுப்பதற்குச் சிரமமாக இருந்தால் மருத்துவ ஆலோசனையை நாடுவதே சிறந்த வழி.  

Top