Images
  • Travel Changes
    (படம்: Unsplash/Agus Dietrich)

விமானப் பயணங்களில் எத்தனை மாற்றம்!

இது வெளியூர் விமானப் பயணங்கள் மாற்றம் கண்டு வருகின்றன என்பதற்கு ஓர் உதாரணமே!

கடந்த சில ஆண்டுகளில் விமானப் பயணங்களில் எத்தனையோ மாற்றங்கள்.....

1. அச்சடிக்கப்பட்ட விமானப் பயணச் சீட்டுகள் தேவையில்லை

முன்னர், வெளியூர் பயணம் செய்யத் திட்டமிட்டால் பயண முகவரிடம் சென்று, பயணச் சீட்டு வாங்கவேண்டும். பயணச் சீட்டு ஒரு சிறிய புத்தகம் போல இருக்கும்.

விமான இருக்கை உறுதிச்சீட்டைப் பெற விமான நிலையத்தில் கடப்பிதழ் மட்டுமின்றி பயணச் சீட்டுப் புத்தகத்தையும் கொடுத்துவந்தோம். அந்தக் காலம் மலையேறிவிட்டது.

2. விமானச் சேவை நிறுவனத்துக்கு அழைத்து பயணத்தை மறுஉறுதி செய்யத் தேவையில்லை

ஒரு காலத்தில் விமானப் பயணச் சீட்டை வாங்கினால் மட்டும் பயணம் உறுதியாகாது...நினைவிருக்கிறதா?
பயணிகள் பயணத்திற்கு இரு நாட்கள் முன்னரே விமானச் சேவை நிறுவனத்துக்கு அழைத்து மறுஉறுதி செய்யவேண்டும்.

3. விமானங்களில் புகைப்பிடிக்க முடியாது

முன்னொரு காலத்தில் விமான இருக்கை உறுதிச்சீட்டைப் பெறும்போது புகைப்பிடிப்பீர்களா என்ற கேள்வி கேட்கப்படும். அதற்குரிய இருக்கை வேண்டுமா என்ற கேள்வியை விமானச் சேவை அதிகாரிகள் முன்வைப்பார்கள்.

தீப் பிடிக்கும் அபாயத்தைத் தவிர்க்க அந்த அம்சம் அகற்றப்பட்டது.

4. விமானங்களில் பெரிய திரையில் திரைப்படம் காட்டப்படுவதில்லை

முன்பு, விமானங்களில் பெரிய திரையில் திரைப்படம் போடுவது வழக்கம். சில விமானங்களில், இப்போது ஒவ்வொரு இருக்கையிலும் தனித் திரை உள்ளது. பயணிகள் தங்களுக்கு விருப்பமான திரைப்படத்தை அதில் பார்க்கலாம்.

5. நீண்டு தூரம் செல்லும் விமானப் பயணங்களில் இடையில் நிறுத்தம் கிடையாது

விமானங்கள் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளும்போது, பெட்ரோல் நிரப்புவதற்காக இடையில் நிறுத்தப்படுவது வழக்கம்.

ஆனால் இப்போது நீண்ட தூரம் செல்லும் விமானங்கள் இடையில் நிறுத்தமில்லாமல் செல்வது சாத்தியமாகியுள்ளது.

இன்னும் காலவோட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் வருமோ? பொறுத்திருந்து பார்ப்போம்.
  

Top