Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அறிவாற்றலை அதிகரிக்க 4 வழிகள்

அறிவாற்றலை அதிகரிக்க வேண்டுமா? இவ்வழிகளைப் பின்பற்றுங்கள்!

வாசிப்புநேரம் -
அறிவாற்றலை அதிகரிக்க 4 வழிகள்

படம்: Pixabay

அறிவாற்றலை அதிகரிக்க வேண்டுமா? இவ்வழிகளைப் பின்பற்றுங்கள்!

1. பிரகாசமான விளக்குகளைப் பயன்படுத்துவது

அமெரிக்கப் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று இதனைக் கண்டுபிடித்தது. பிரகாசமான விளக்குகளுக்கு அருகிலிருந்த எலிகளுடன் ஒப்பிடுகையில் அதிகப் பிரகாசம் இல்லாத விளக்குகளுக்கு அருகிலிருந்த எலிகளின் மூளையில் உள்ள hippocampus பகுதியின் செயல்பாடு 30 விழுக்காடு குறைந்தது. கற்றலுக்கும் ஞாபகத் திறனுக்குமான மூளையின் பகுதி இது.

2. இயற்கையைப் பாருங்கள்

இயற்கையான இடங்களில் நேரம் செலவிடுவது பிரச்சினைகளை வித்தியாசமான முறையில் சமாளிக்கும் ஆற்றலை 50 விழுக்காடு வரை அதிகரிக்கக்கூடும். மூளையின் முன் பகுதியான prefrontal cortex ஓய்வெடுக்க இயற்கை உதவுகிறது.

பிரச்சினைகளைச் சமாளிப்பது, உத்திகளை வகுப்பது, முடிவுகளை எடுப்பது ஆகியவற்றுக்கு மூளையின் இப்பகுதி முக்கியம்.

3. கையால் குறிப்புகளை எழுதுவது

கணினியில் தட்டச்சு செய்வதோடு ஒப்பிடுகையில் கையால் குறிப்புகள் எழுதுவதற்குக் கூடுதல் அவகாசம் தேவைப்படும். இதனால் முக்கியமான தகவல் எது என்று யோசித்து எழுதுவது இயல்பு. இவ்வாறு யோசித்து எழுதுவது கருத்துகளைப் புரிந்துகொள்ள உதவும்.

4. உணவை கண்ணாடி அல்லது பீங்கான் தட்டுகளில் சூடாக்குவது

பிளாஸ்டிக் தட்டுகளில் உணவைச் சூடாக்கும்போது அவற்றிலுள்ள BPA மற்றும் phthalates இரசாயனங்கள் மூளையைப் பாதிக்கக்கூடும். இதனால் உங்கள் நினைவாற்றலும் கற்றலும் பாதிக்கப்படக்கூடும்.

அதற்குப் பதிலாக கண்ணாடி அல்லது பீங்கான் தட்டுகளைப் பயன்படுத்துவது சிறந்தது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்