Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஓவியக் கலைஞர் Van Gogh-வுக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை. குடிப்பதை நிறுத்தியதால் ஏற்பட்ட பக்க விளைவு - ஆய்வு

பிரபல ஓவியக்கலைஞர் ஒருவர் மதுப் பழக்கத்தை நிறுத்தியதால் தன்னையே மறந்து சித்தப்பிரமை அடைந்ததாக ஆய்வுகள் காட்டுகின்றன.

வாசிப்புநேரம் -

பிரபல ஓவியக்கலைஞர் ஒருவர் மதுப் பழக்கத்தை நிறுத்தியதால் தன்னையே மறந்து சித்தப்பிரமை அடைந்ததாக ஆய்வுகள் காட்டுகின்றன.

Sunflowers, The Starry Night போன்ற பிரபல ஓவியங்களை வரைந்த பெருமைக்குரியவர் ஓவியக் கலைஞர் வின்சண்ட் வான் கோ (Vincent Van Gogh).

1853 இல் பிறந்த அவர் 1890 இல் காலமானார். அவர் மனநோயாளி என்றே பலரும் நம்பிவருகின்றனர்.

ஒரு வாக்குவாதத்தின்போது அவர் தம் இடது காதையே வெட்டியெடுத்தார்!

அவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, அவர் எழுதிய நூற்றுக்கணக்கான கடிதங்களும், அவரது மருத்துவப் பதிவுகளும் திரட்டப்பட்டன.

அவற்றைக் கொண்டு நெதர்லந்து பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தில் (University Medical Centre Groningen) ஆய்வு நடத்தப்பட்டது.

குடிப்பதை நிறுத்தியதால், ஏற்பட்ட பக்க விளைவால் அவர் பைத்தியம் பிடித்ததைப் போல் நடந்துகொண்டார் என ஆய்வு காட்டியது.

அவருக்கு வேறு சில மனநோய்களும் உண்டு என நம்பப்படுகிறது. இருப்பினும் அந்தக் காலத்தில் அது மருத்துவ ரீதியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை.

புதிய கண்ணோட்டத்தில் சிறந்த ஓவியங்களைப் படைக்க மன நோயும் வான் கோவுக்கு உதவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மனநோய் முற்றியிருந்தபோது அவர் ஓவியம் ஏதும் வரையவில்லை. கடின உழைப்பாலும், திறமையாலும் அவர் ஓவியக் கலையில் சாதனைகள் புரிந்ததாக நிபுணர்கள் கருதுகின்றனர்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்