Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சைவ 'இறைச்சி' உண்மையான இறைச்சியை மிஞ்சிவிடுமா?

பார்ப்பதற்கு இறைச்சியைப் போன்றே இருக்கும்.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: சுமார் 1 நிமிடம்)

பார்ப்பதற்கு இறைச்சியைப் போன்றே இருக்கும்.

சுவையும் கிட்டத்தட்ட இறைச்சியைப் போன்றே இருக்கும்.

அத்தகைய சைவ 'இறைச்சி' தற்போது பிரலமடைந்து வருகிறது.

உண்ணும் உணவு சுற்றுப்புறத்திலும் உடலிலும் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த அக்கறையால், இறைச்சியைத் தவிர்ப்பதில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இறைச்சியின் சுவையையும் தோற்றத்தையும் கொண்ட சைவ உணவுப் பொருள்கள் பல ஆண்டுகளாகவே சந்தையில் உள்ளன.

இப்போது சைவ இறைச்சியை உருவாக்கும் ஆராய்ச்சியில் அறிவியல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

அவை செடிகொடிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.

கோதுமை, கிழங்கு போன்ற புரதச்சத்து நிறைந்தவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

பீட்ரூட் சாறு ஆகிய இயற்கை வண்ணங்களைக் கொண்டு இறைச்சியில் ரத்தம் இருப்பது போன்ற தோற்றம் கொடுக்கப்படுகிறது.

இதற்கிடையே விலங்குகளிடம் இருந்து பெறப்படும் இறைச்சியைச் சாப்பிடுவதற்குத் தயங்குவோருக்குச் செயற்கை முறையில் உருவாக்கப்படும் இறைச்சியும் விரைவில் அறிமுகமாகலாம்.

அது விலங்குகளின் மூல உயிரணுவைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

அந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் இறைச்சியை இன்னும் சில ஆண்டுகளில் சுவைக்கும் வாய்ப்பு கிட்டலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்