Images
  • voodoo dolls
    படம்: Pixabay 

வேலை மனவுளைச்சலுக்குத் தீர்வு, முதலாளிகளைப் போன்ற "வூடூ" பொம்மைகள்

வேலையினால் ஏற்படும் மனவுளைச்சலைக் குறைக்க ஆய்வாளர்கள் ஒரு விசித்திரமான முறையைக் கண்டுபிடித்துள்ளனர்.

கனடாவிலுள்ள வில்ஃபிரிட் லாரியர் பல்கலைக்கழகத்தில் 229 அலுவலக ஊழியர்களிடம் நடத்தப்பட்டது ஆய்வு. அதில் ஊழியர்கள் தங்கள் வேலையிடத்தில் முதலாளி அதிகம் மனவுளைச்சல் அளித்த சம்பவத்தை நினைவுகூருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

அவர்களில் சிலர் தங்கள் வெறுப்பை "வூடு" பொம்மை மீது காட்டுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். பொம்மையைக் கிள்ளுவது, ஊசியால் குத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர் ஊழியர்கள்.

அதன் பின் ஊழியர்களிடம் முதலாளிகள் மீதுள்ள அதிருப்தியைக் கணக்கிட்டனர் ஆய்வாளர்கள். அதில் 30 விழுக்காட்டினருக்கு முதலாளிகள் மீதுள்ள கோபம் குறைந்ததாகத் தெரியவந்தது.

அவர்களது வேலைத் திறனும் மேம்பட்டது. இது போன்ற செயல்கள் ஊழியர்களுக்கு ஒருவகையில் பழிதீர்க்கும் வாய்ப்பைத் தருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இனிமேல் முதலாளிகள் சம்பளத்துடன் "வூடு" பொம்மைகளையும் சேர்த்துக் கொடுப்பார்களா ?


உங்கள் கருத்து

Top