Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஆரோக்கியத்தை மேம்படுத்த, நிமிடத்திற்கு 100 அடி நடப்பது நல்லது

விரைவாக நடப்பது உடல்நலத்திற்கு நல்லது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் விரைவு நடையின் அளவுகோல் என்ன?

வாசிப்புநேரம் -
ஆரோக்கியத்தை மேம்படுத்த, நிமிடத்திற்கு 100 அடி நடப்பது நல்லது

படம்: Unsplash/Rist Art

நியூயார்க்: விரைவாக நடப்பது உடல்நலத்திற்கு நல்லது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் விரைவு நடையின் அளவுகோல் என்ன?

ஒரு நிமிடத்திற்குச் சுமார் 100 அடி எடுத்து வைத்தால் அதை வேகநடையாக வகைப்படுத்தலாம் என்கிறது புதிய ஆய்வு ஒன்று.

அது, நம்மில் பலரும் நினைப்பதைக் காட்டிலும் சற்றுக் குறைவுதான். தற்போதுள்ள உடற்பயிற்சிக் குறிப்புகள் வேக நடையைத் துல்லியமாக வரையறை செய்வதில்லை.

எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்திருக்க ஆகும் சக்தியைப் போல, வேக நடைக்கு மூன்று மடங்கு சக்தி தேவை என்று, உடற்பயிற்சி நிபுணர்கள் சொல்வதுண்டு.

அல்லது, உங்களது உச்சபட்ச இதயத் துடிப்பு விகிதத்தில் 70 விழுக்காட்டை, நடக்கும்போது எட்டினால் அதை வேகநடையாகக் கருதலாம் என்றும் சொல்லப்படுவதுண்டு.

ஆனால் அதையெல்லாம் அளந்து பார்ப்பது அவ்வளவு எளிதல்ல.

ஆகவே, ஒரு நிமிடத்துக்கு 100 அடிகள் என்பது எந்தக் கருவியும் இன்றிச் சாதாரணமாகவே எவரும் எளிதில் கணக்கிடக்கூடிய முறை.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்